லைவ்: ஆசிய விளையாட்டு – பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் இந்தியா…!

ஆசிய விளையாட்டு தொடரில் 13 தங்கம், 24 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

Live Updates

  • 3 Oct 2023 7:26 AM GMT

    சாப்ட் டென்னிஸ்:

    சாப்ட் டென்னிஸ் பெண்கள் குழு சுற்று ஏ போட்டி 4ல் இந்தியா – ஜப்பான் மோதின. இப்போட்டியில் 3-0 என்ற செட் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஜப்பான் அபார வெற்றிபெற்றது.

    சாப்ட் டென்னிஸ் பெண்கள் குழு சுற்று ஏ போட்டி 6ல் இந்தியா – வியட்நாம் மோதின. இப்போட்டியில் 3-0 என்ற செட் கணக்கில் வியட்நாமை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. 

    • Whatsapp Share

  • 3 Oct 2023 7:10 AM GMT

    குத்துச்சண்டை:

    குத்துச்சண்டை பெண்கள் 66-75 கிலோ பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியா – தாய்லாந்து மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 5-0 புள்ளி கணக்கில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை லவ்லி அபார வெற்றிபெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் குத்துச்சண்டை பெண்கள் 66-75 கிலோ பிரிவின் இறுதிப்போட்டிக்கு லல்வி தகுதிபெற்றுள்ளார். இதன் மூலம் இந்திய வீராங்கனை லவ்லிக்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.

    • Whatsapp Share

  • 3 Oct 2023 6:31 AM GMT

    பதக்க பட்டியல்:

    ஆசிய விளையாட்டு தொடரில் 13 தங்கம், 24 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

    • Whatsapp Share

  • 3 Oct 2023 6:30 AM GMT

    குத்துச்சண்டை:

    குத்துச்சண்டை பெண்கள் 50-54 கிலோ பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியா – சீனா மோதின. இப்போட்டியில் 5-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீராங்கனை பிரீத்தியை வீழ்த்தி சீன வீராங்கனை அபார வெற்றிபெற்றார்.

    அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்தபோதிலும் இந்திய வீராங்கனை பிரீத்திக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.

    • Whatsapp Share

  • 3 Oct 2023 6:24 AM GMT

    ஸ்குவாஷ்:

    ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு டி போட்டி 118ல் இந்தியா – ஹாங்காங் மோதின. இப்போட்டியில் 11-10, 11-8 என்ற நேர் செட்களில் ஹாங்காங் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது. இந்திய அணியில் அபே சிங், அனஹத் சிங் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்

    • Whatsapp Share

  • 3 Oct 2023 6:10 AM GMT

    தடகளம்:

    தடகளம் ஆண்கள் டெகாத்லான் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் 6ம் இடம் (கடைசி இடம்) பிடித்தார். ஒட்டுமொத்த தரவரிசையில் தேஜஸ்வின் 2ம் இடத்தில் உள்ளார்.

    • Whatsapp Share

  • 3 Oct 2023 5:59 AM GMT

    கேனோ ஸ்பிரிண்ட்:

    கேனோ ஸ்பிரிண்ட் பெண்கள் கேனோ இரட்டையர் 200மீட்டர் இறுதிப்போட்டியில் இந்திய அணி 8ம் இடம் (கடைசி) பிடித்தது. இப்போட்டியில் சீனா தங்கப்பதக்கம் வென்றது.

    • Whatsapp Share

  • 3 Oct 2023 5:57 AM GMT

    கேனோ ஸ்பிரிண்ட்:

    கேனோ ஸ்பிரிண்ட் பெண்கள் கயக் நால்வர் 500 மீட்டர் இறுதிப்போட்டியில் இந்திய அணி 8ம் இடம் (கடைசி) பிடித்தது. இப்போட்டியில் சீனா தங்கப்பதக்கம் வென்றது.

    • Whatsapp Share

  • 3 Oct 2023 5:46 AM GMT

    சாப்ட் டென்னிஸ்:

    சாப்ட் டென்னிஸ் பெண்கள் குழு சுற்று ஏ போட்டி 2ல் இந்தியா – மங்கோலியா மோதின. இப்போட்டியில் 3-0 என்ற செட் கணக்கில் மங்கோலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

    • Whatsapp Share

  • 3 Oct 2023 5:34 AM GMT

    சாப்ட் டென்னிஸ்:

    சாப்ட் டென்னிஸ் ஆண்கள் குழு பிரிவு ஏ போட்டி 2ல் இந்தியா – தாய்லாந்து மோதின. இப்போட்டியில் 2-1 என்ற செட் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தாய்லாந்து அபார வெற்றிபெற்றது.

    • Whatsapp Share


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.