"இந்தக் காரணங்களால்தான் தென்னிந்திய சினிமாவில் அதிகம் நடிக்காமல் இருக்கிறேன்"- நடிகை தமன்னா

தமிழ், தெலுங்கு படங்களைத் தொடர்ந்து பாலிவுட்டில் கால்பதித்து பிசியாக நடித்து வருகிறார் நடிகை தமன்னா.

விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என  முன்னணி நடிகர்களுடன்  நடித்த அவர் சமீபத்தில்  வெளியான ஜெயிலர் படத்தில் உள்ள காவாலா பாடல் மூலம் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருந்தார். இதனிடையே தொடர்ந்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி நடித்து வரும் தமன்னா தென்னிந்தியப் படங்களில் இருந்து சிறிது விலகி இருப்பதற்கா காரணத்தைத்  தெரிவித்திருக்கிறார். 

தமன்னா | Tamannaah Bhatia

ஃபிலிம்பேர் உடனான உரையாடலில் பேசிய அவர் , “தென்னிந்திய சினிமாவில் சில ஃபார்முலாக்கள் இருக்கின்றன. அவை மிகவும் எளிதானவை. சில கமர்ஷியல் படங்களில், எனது கதாபாத்திரங்களுடன் என்னால் பொருந்த முடியவில்லை. இயக்குநர்களிடம் அதைக் குறைக்கும்படி கேட்டிருக்கிறேன். சகிக்க முடியாத அளவுக்கு ஆணாதிக்கத்தைக் கொண்டாடும் படங்களில் நடிக்காமல் இருக்க முயற்சி செய்யத் தொடங்கியதால்தான் தென்னிந்திய சினிமாவில் இருந்து சற்று விலகி  இருக்கிறேன்.

மேலும் தென்னிந்திய படங்களுக்குக் கிடைத்த வெற்றி ஏன் பாலிவுட் படங்களுக்கு கிடைக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த தமன்னா “பாலிவுட்டில் நான் நடித்த படங்கள்  பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும்  நான் அதை ஒருபோதும் தனிப்பட்ட தோல்வியாக எடுத்துக் கொள்ளவில்லை. 

தமன்னா | Tamannaah Bhatia

ஏனென்றால் ஒரு திரைப்படம் நிறைய பேர் பங்களிப்புடன் உருவாகிறது. அந்த வகையில் எனது வெற்றி தோல்விகள் இரண்டில் இருந்தும் சற்று ஒதுங்கி இருக்கிறேன். எதையுமே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.