வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்திப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியா மீது கனடா தெரிவித்த குற்றச்சாட்டுகள் தீவிரமானவை எனவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரி ஜான் கிர்பி கூறியதாவது: கனடா குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். இரு தரப்பு உறவுகள் குறித்து இந்தியாவும், கனடாவும் பேச வேண்டும்.
கனடாவின் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. அது குறித்து முழுவதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறோம். விசாரணையில் இந்தியாவும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வேதந்த் பாட்டீல் கூறுகையில், ‛‛ கனடா அரசின் விசாரணையில் இந்தியா பங்கேற்பதுடன், முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாங்கள் தனிப்பட்ட முறையிலும், வெளிப்படையாகவும் கூறியுள்ளோம்”. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement