ஷிவமொகா : கலவரம் நடந்து பகுதிக்கு சென்ற அமைச்சர் மது பங்காரப்பா, அதிகம் பாதித்த பகுதிக்கு வரவில்லை என பெண்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
ஷிவமொகா மாவட்டம், ராகிகுட்டாவின் சாந்தி நகருக்கு தொடக்க கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா நேற்று பார்வையிட்டார்.
பின், அவர் அளித்த பேட்டி:
ஷிவமொகாவில் ஊர்வலத்தின் போது நடந்த கலவரம் தொடர்பாக, இதுவரை 24 எப்.ஐ.ஆர்.,கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மோதலின் போது சிறு காயங்கள் ஏற்பட்டன. வழக்கு தொடர்பாக முழு தகவல்கள் பதிவேற்றுவோம். ரகளையில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்ப முடியாது. சட்டம் அனைவருக்கும் ஒன்று தான்.
நகரில் சில இடங்களில் அமல்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவை தளர்த்த சிலர் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளேன். கல்வீச்சில் பாதிக்கப்பட்ட சில வீடுகளுக்கு சென்றேன். மற்ற இடங்களுக்கு செல்ல இயல முடியாததால், இதற்கு வேறு காரணம் கற்பிக்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால், ராகிகுட்டாவில் பாதிக்கப்பட்ட மக்கள் கூறியதாவது:
கலவரத்தில் உண்மையில் சேதமடைந்த பகுதிகளை அமைச்சர் பார்க்கவில்லை. சிறு சேதமடைந்த பகுதியை பார்வையிட்டு, மக்களிடம் பேசிவிட்டு, படம் எடுத்து கொண்டு சென்றுவிட்டார். எங்கள் கஷ்டத்துக்கு அரசு செவிசாய்க்காதது வருத்தம் அளிக்கிறது.
எங்கள் மகன்களை தேவையின்று போலீசார் கைது செய்துள்ளனர்.
ஊர்வலத்தில் கற்கள் வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹிந்துக்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement