புதுடில்லி, தமிழகத்தின் கோவையில், 58 பேர் உயிரிழக்க காரணமான குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, 16 பேர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கோவையில், 1998 பிப்., 14 – 17ம் தேதிகளில், 19 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில், 58 பேர் உயிரிழந்தனர்; 250 பேர் காயமடைந்தனர்.
இதைத் தவிர, 24 இடங்களில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் மீட்கப்பட்டு, செயலிழக்கம் செய்யப்பட்டன.அல் – உம்மா தலைவர்களான எஸ்.ஏ. பாட்ஷா, முகமது அன்சாரி உள்ளிட்டோர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம், 2009ல் உறுதி செய்தது.
இதை எதிர்த்தும், ஜாமின் கேட்டும், இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, 16 பேர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.இவை, நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், சி.டி. ரவிகுமார், சுதான்ஷூ துலியா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு கூறியதாவது:
கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில், 58 பேர் உயிரிழந்துஉள்ளனர்.
இவர்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்ற மாகும். இவர்கள், 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளதால், விடுவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
குற்றத்தின் தன்மையே இதில் முக்கியமாகும். ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்க்கும் மனுக்கள், அடுத்தாண்டு, பிப்.,ல் விசாரிக்கப்படும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement