காங்டாக்: சிக்கிம் மாநிலம் லச்சேன் பள்ளத்தாக்கு பகுதியில் மேக வெடிப்பு நிகழ்ந்ததை அடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 23 ராணுவ வீரர்கள் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிக்கிம் மாநிலம் லச்சேன் பள்ளத்தாக்கு பகுதியில் திடீரென மேக வெடிப்பு நிகழ்ந்தது. இதனால் கனமழை கொட்டி தீர்த்ததுடன் காட்டாற்று வெள்ளம் உருவானது. தீஸ்தா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமாகினர். அவர்கள் அனைவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ராணுவ வீரர்கள், வாகனங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/gallerye_094302569_3448464.jpg)
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/gallerye_094308482_3448464.jpg)
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/gallerye_094319725_3448464.jpg)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement