சீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் விபத்து: 55 பேர் பலி!| Chinas Nuclear Submarine Suffers Catastrophic Failure, 55 Dead: Report

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பீஜிங்: சீனாவுக்கு சொந்தமான அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட விபத்தில் 55 பேர் பலியாகி உள்ளதாக பிரிட்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது. ஆனால், இந்த தகவலை சீனா மறுத்துள்ளது.

இது தொடர்பாக பிரிட்டன் நாளிதழில் வெளியான செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: சீனாவுக்கும், கொரிய தீபகற்பத்திற்கும் இடையே உள்ள மஞ்சள் கடல் பகுதியில் சீன கடற்படைக்கு சொந்தமான அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட பேரழிவில் சிக்கி, அந்த கப்பல் கேப்டன், 21 அதிகாரிகள் உள்ளிட்ட 55 பேர் உயிரிழந்தனர்.

கடந்த ஆக.,21 அன்று இந்த கப்பல் ஷாங்டாங் மாகாணம் அருகே வந்த போது, கப்பல் விபத்துக்குள்ளானதால், அதில் இருந்த ஆக்ஸிஜன் காலியானது. இதன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டது. இது, அந்த கடல் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீன பாதுகாப்பு கருவிகள் கண்டுபிடித்தது என பிரிட்டன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சீன சமூக வலைதளத்திலும் இந்த தகவல் வெளியாகி, அந்நாட்டில் வேகமாக பரவியது. ஆனால், அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் விபத்தை சீனா மறுத்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.