![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1696409413_NTLRG_20231004110959143599.jpg)
'தங்கலான்', அதிகம் எதிர்பார்க்கும் மாளவிகா மோகனன்
'பேட்ட, மாஸ்டர், ஜகமே தந்திரம்' படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். அடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். சரித்திரப் படமாக உருவாகி வரும் இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம் ஒன்றில் மாளவிகா நடித்துள்ளார்.
நேற்று டுவிட்டர் தளத்தில் ரசிகர்களுடன் சாட் செய்த மாளவிகாவிடம், 'தங்கலான்' படம் பற்றி ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டதற்கு, “தங்கலான்' இதுவரையில் மிகவும் சவாலான ஒன்று. எனது வாழ்க்கையில் இப்படி ஒரு உத்வேகத்தை எனக்குள் பார்த்ததில்லை. இக்கதாபாத்திரம், எனது நடிப்பு உங்களுக்கு நிஜமாக பிடிக்கும் என எதிர்பார்க்கிறேன். அவ்வளவு அர்த்தம் உள்ளது,” என்று பதிலளித்துள்ளார்.
'தங்கலான்' படம் தமிழில் தனக்கு ஒரு திருப்புமுனையைத் தரும் என பெரிதும் நம்புகிறார் மாளாவிகா. 2024 பொங்கல் வெளியீடாக 'தங்கலான்' வரும் எனத் தெரிகிறது.