மும்பை: பெண்ணின் தங்க தாலியை விழுங்கிய எருமை வயிற்றை அறுவை சிகிச்சை செய்து செயினை மீட்ட சம்பவம் மஹாராஷ்டிராவில் நடந்தது.
மஹாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் ராம்ஹரி என்பவரின் மனைவி குளிக்கச் செல்லும் முன்பு தன் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க தாலி செயினை கழற்றி, தட்டு ஒன்றில் வைத்துள்ளார். தங்க தாலி வைத்ததை மறந்துவிட்டு அதேட்டில் சோயாப்பீன்ஸ், வேர்கடலை தோலையும் கலந்து தன் வீட்டில் வளர்த்து வரும் எருமை மாட்டிற்கு உணவாக வைத்துள்ளார். அந்த உணவுடன் தங்க தாலியையும் சேர்த்து எருமை தின்றுவிட்டது.
தங்க தாலி செயின் காணாமல் போனதை உணர்ந்த அப்பெண் எருமைக்கு உணவு வைத்த தட்டில் தாலியை வைத்திருந்தது அவருக்கு நினைவுக்கு வந்தது.
கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்தார். எருமையின் வயிற்றில் தாலி இருப்பதை உறுதி செய்து, 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் தங்க தாலியைகால்நடை மருத்துவர்கள் மீட்டனர். இதன் மதிப்பு ரூ.ஒன்றரை லட்சம் என கூறப்படுகிறது.
தங்க தாலியை தின்ற எருமை வயிற்றில் 63 தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement