வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஒட்டவா: தனிப்பட்ட முறையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம் என கனடா வெளியுறவு அமைச்சர் மெலைன் ஜாலி தெரிவித்துள்ளார்.
வட அமெரிக்க நாடான கனடாவில் கடந்த ஜூன் மாதம், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில், இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக, கனடா பார்லி.,யில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இதனால், இந்தியா – கனடா உறவில் முன்எப்போதும் இல்லாத அளவிற்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடாவின் 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றுக்கொள்ள இந்தியா வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில் இந்தியாவுடன் பிரச்னையை அதிகரிக்க விரும்பவில்லை, ஆக்கபூர்வமான உறவை வலுப்படுத்த விரும்புகிறோம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
கனடா விருப்பம்
இது குறித்து, கனடா வெளியுறவு அமைச்சர் மெலைன் ஜாலி கூறியிருப்பதாவது: நாங்கள் இந்திய அரசுடன் தொடர்பில் உள்ளோம். எங்கள் தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை முக்கியமாக கருதுகிறோம். தனிப்பட்ட முறையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.
தூதரக உரையாடல்கள் தனிப்பட்ட முறையில் நிகழ்வதுதான் சிறந்தது. தூதரக அடிப்படையில், அமைதியாக இருதரப்பினரும் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தால், இப்படி இரு நாடுகளுக்கிடையிலான உறவிலும் எந்த பாதிப்புமே ஏற்பட்டிருக்காது. இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மேம்படுமானால், இரு தரப்பினருக்கும் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement