
பாலியல் தொல்லை – ஈஷா குப்தா புகார்
ஹிந்தியில் பல படங்களில் நடித்தவர் ஈஷா குப்தா. தமிழில் ‛யார் இவன்' என்ற படத்தில் நடித்தார். சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில் சினிமாவில் தான் சந்தித்த பாலியல் தொல்லை பற்றி பேசி உள்ளார். அவர் கூறுகையில், ‛‛சினிமாவில் நான் இரண்டு முறை பாலியல் தொல்லையை எதிர்கொண்டேன். ஒரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குனர் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொல்லி என்னை கேட்டனர். நான் மறுத்ததால் என்னைப்பற்றி தவறான தகவல்களை பரப்பினார். இதனால் சில பட வாய்ப்புகளை இழந்தேன். இன்னொரு படத்திலும் இதேப்போன்று என்னிடம் அணுகினர். அவர்களின் நோக்கத்தை புரிந்து நான் சுதாரித்துக் கொண்டு மறுத்துவிட்டேன்,'' என்றார்.