ஊழலுக்கு எதிராகவும், மோடியை 3-வது முறையாக பிரதமராக்க தமிழக மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கிலும், ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். அண்ணாமலையின் யாத்திரையை கடந்த ஜூலை மாதம் ராமநாதபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். மொத்தம் 5 கட்டங்களாக 168 நாள்கள் யாத்திரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1695840368_683_Untitled_18.jpg)
இதற்கிடையில், அண்ணாமலைக்கும் அ.தி.மு.க-வுக்கும் வெளிப்படையாகவே முட்டல் மோதல் நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க – பா.ஜ.க இடையே இருந்தக் கூட்டணியையும், என்.டி.ஏ- கூட்டணியையும் அ.தி.மு.க முறித்துக் கொண்டதாக அறிவித்தது. இந்த நிலையில், திடீரென அண்ணாமலை, அவசரமாக டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
வழக்கம்போல தலைவர்களிடம் நடைப்பயணம் தொடர்பான தகவல்களை வழங்கச் செல்வதாகத் தெரிவித்தார். ஆனால், அவர் டெல்லியிருந்து திரும்பியபோது, பத்திரிகையாளர் சந்திப்பைத் தவிர்த்துவிட்டுச் சென்றார். இந்த நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/Untitled_2__1_.jpg)
இருமல், மூச்சு விடுவதில் சிரமம், உடல் சோர்வு காரணமாக தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. இது தொடர்பாக அந்த மருத்துவமனை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அண்ணாமலைக்கு சுவாசக்குழாயில் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், 2 வாரங்கள் வீட்டில் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, அண்ணாமலையின் யாத்திரை அக்டோபர் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.