மூவர்ண கொடியை கீழே விழாமல் லாவகமாக பிடித்த நீரஜ் சோப்ரா| Neeraj Chopra easily caught the national flag without falling down

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஹாங்சு: பார்வையாளர் ஒருவர் வீசிய நம் தேசியக்கொடியை தடகள வீரர் நீரஜ் சோப்ரா கீழே விழாமல் தடுத்து பிடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

சீனாவின் ஹாங்சுவில் 19வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதன் ஈட்டி எறிதல் போட்டியில், 4-வது வாய்ப்பில் அதிகபட்சமாக 88.88 மீ., துாரம் எறிந்த நீரஜ், தங்கத்தை தட்டிச்சென்றார். இது, ஆசிய விளையாட்டில் இவர் தொடர்ந்து வென்ற 2வது தங்கம்.

இந்நிலையில் தங்கம் வென்ற உற்சாகத்தில் மைதானத்தில் சுற்றி வந்து புகைப்படம் எடுக்க சென்று கொண்டிருந்த நீரஜ் சோப்ராவை நோக்கி பார்வையாளர் ஒருவர் நமது மூவர்ண தேசியகொடியை வீசினார். உடனே அதை கீழே விழாமல் தடுத்து லாவகமாக பிடித்தார் நீரஜ் சோப்ரா. இதன் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.