ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு
இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் தொடர்ந்து முன்னனி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வந்தாலும் ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து 'அடியே' திரைப்படம் திரைக்கு வந்தது.
கடந்த வருடத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் 'ரிபெல்' எனும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்தனர். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு சென்னை, மூணார் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்ததாக இது தமிழ் சினிமாவிற்கு திருப்புமுனையான படமாக உருவாகியுள்ளது என ஜி. வி. பிரகாஷ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.