ஆமதாபாத்: இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (அக்.,5) துவங்கியது. ஆமதாபாத்தில் நடக்கும் முதல் போட்டியில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி ‘பவுலிங்’ தேர்வு செய்தது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் 1975 முதல் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 13வது சீசன் இன்று இந்தியாவில் துவங்கியது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட 10 அணிகள், ‘ரவுண்டு ராபின்’ முறையில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். மொத்தம் 45 லீக் போட்டிகள் முடிவில் ‘டாப்-4’ இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இன்று ஆமதாபாத்தில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. முழங்கால் காயம் காரணமாக வில்லியம்சன் விலகிக் கொள்ள, ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லதாம் ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement