ICC உலகக் கோப்பை 2023 வந்துவிட்டது. அக்டோபர் 5 ஆம் தேதியான இன்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இப்போட்டிகளை நீங்கள் நேரில் பார்க்க வேண்டும் என்றால் BookMyShow-ஐப் பயன்படுத்தி உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். ஏனென்றால் BookMyShow ஐசிசி உலகக் கோப்பை 2023க்கான அதிகாரப்பூர்வ டிக்கெட் பார்ட்னர்.
ஐசிசி உலகக் கோப்பை 2023 டிக்கெட்டுகளை தொலைபேசியில் முன்பதிவு செய்வது எப்படி?
– உங்கள் மொபைலில் BookMyShow செயலியை திறக்கவும்.
– செயலியில் ICC உலகக் கோப்பை 2023 ஆப்சனில் கிளிக் செய்யவும்.
– அப்போது உலக கோப்பை 2023 போட்டிகள் விவரம் வரும்
– அதில் அணியின் கொடியுடன் இருக்கும். அதனை தேர்ந்தெடுப்பதன் மூலம் அணிக்கு ஏற்ப போட்டிகளைக் கண்டறியலாம்.
– மேலே குறிப்பிட்டுள்ள விருப்பங்களில் ஏதேனும் ஒன்றின் மூலம் நீங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
– அடுத்த பக்கத்தில் எத்தனை சீட்களை முன்பதிவு செய்ய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் அதிகபட்சமாக இரண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
– நீங்கள் முன்பதிவு செய்ய விரும்பும் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
– டிக்கெட்டுகள் இன்னும் இருந்தால், உங்கள் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படும்.
– நீங்கள் வழங்கிய முகவரிக்கு டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யப்படும்.
ஐசிசி உலகக் கோப்பை 2023 டிக்கெட்டுகளை கணினியில் முன்பதிவு செய்வது எப்படி?
– BookMyShow-ல் ICC உலகக் கோப்பை 2023 இன் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்துக்கு செல்லலாம்.
– ““View All Matches” விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் இந்தப் பக்கத்தில் உள்ள அனைத்து போட்டிகளையும் பார்க்கலாம்.
– அணிக் கொடிகளைக் கிளிக் செய்வதன் மூலம், மைதானங்கள் அடிப்படையில் போட்டிகளைக் கண்டறியலாம்.
– இந்த விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி நீங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விரும்பும் போட்டியைக் கண்டறியவும்.
ICC உலகக் கோப்பை 2023 டிக்கெட் விலைகள்
ஐசிசி உலகக் கோப்பை 2023 டிக்கெட்டுகள் ரூ. 300ல் தொடங்கி ரூ.25,000 வரை இருக்கும்.
ICC உலகக் கோப்பை 2023 டிக்கெட் முன்பதிவு தொடக்க தேதி
ஐசிசி உலகக் கோப்பை 2023 டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. நீங்கள் BookMyShow-ல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். புக்மைஷோ இணையதளம் அல்லது உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோனில் உள்ள BookMyShow ஆப்ஸைப் பயன்படுத்தி இப்போது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.