லஞ்சம் வழங்குவதும் லஞ்சம் வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்ற நிலையில் திரைப்பட தணிக்கை சான்று வழங்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் மூன்று பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : செப்டம்பர், 2023ல், இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட ஒரு திரைப்படத்திற்கு, மும்பையில் உள்ள CBFC யில் இருந்து தேவையான சென்சார் சான்றிதழைப் பெறுவதற்காக, ரூ.7,00,000/- லஞ்சம் கேட்டு, ஒரு தனியார் நபர் மற்றவர்களுடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. […]