திலீப்பின் தங்கமணி படத்தில் இணைந்த நான்கு ஆக்ஷன் இயக்குனர்கள்
மலையாள நடிகர் திலீப்பை பொறுத்தவரை பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் குடும்பப் பாங்கான படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பவர். என்றாலும் ஆக்ஷன் படங்களிலும் அதிரடி காட்டக் கூடியவர் தான். அந்த வகையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது திலீப் நடித்து வரும் தங்கமணி திரைப்படம் கிராமத்து பின்னணியில் அதே சமயம் முழுக்க முழுக்க ஆக்ஷனை மையப்படுத்தி உருவாகி வருகிறது.
அதனால் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைப்பதற்காகவே தமிழில் இருந்து சுப்ரீம் சுந்தர், ஸ்டண்ட் சிவா, மாபியா சசி மற்றும் ராஜசேகர் என நான்கு சண்டை பயிற்சி இயக்குனர்கள் இணைந்துள்ளனர். ரதீஷ் ரகுநந்தன் என்பவர் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் அடி எடுத்து வைக்கிறார் நடிகை பிரணிதா சுபாஷ்.