ரஜினியை சந்தித்த வசந்த் ரவி
தரமணி படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் வசந்த் ரவி அதன்பிறகு ராக்கி, அஸ்வின்ஸ் படங்களில் நடித்தார். ரஜினியுடன் அவர் நடித்த ஜெயிலர் படம் அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. தற்போது சத்யராஜ் உடன் வெப்பன் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்த நிலையில் ரஜினியை சந்தித்தார் வசந்த் ரவி. இந்த சந்திப்பில் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கும் அடுத்து தயாராகும் ரஜினியின் 170வது படத்தின் வெற்றிக்கும் வாழ்த்து கூறினார். ஜெயிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றியும் தெரிவித்தார். அடுத்து தான் தயாரித்து நடிக்கும் படத்திற்காக ஆசியும் பெற்றுத் திரும்பி இருக்கிறார்.