பார்ட்டிகளில் இப்போது டிஜே இல்லாமல் இருப்பதில்லை. அப்படியான உற்சாகத்தையும், இனிமையான அனுபவங்களையும் கொடுக்கும் அந்த டிஜே சவுண்ட் சிஸ்டத்தை, எப்போதும் வீட்டில் இருந்தே அனுபவிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அது நிச்சயம் முடியும். சூப்பரான ஸ்மார்ட் டிவி ஒன்று குவாலிட்டியான சவுண்ட் சிஸ்டத்துடன் இப்போது மார்கெட்டில் களமிறங்கியிருக்கிறது. 55 இன்ச் ஸ்கிரீன் மற்றும் 76W சவுண்ட் சிஸ்டம் கொண்டிருக்கும், அந்த டிவியின் விலை ரூ.26,999 மட்டுமே. இதே வகையில் இருக்கும் மற்ற ஸ்மார்ட் டிவிக்களின் விவரங்களையும் கூடுதலாக பார்க்கலாம்.
55 இன்ச் ஏசர் ஸ்மார்ட் டிவி
நீங்கள் ஒரு பெரிய ஸ்மார்ட் டிவியை வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. 55 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட மூன்று புதிய டிவிகளை ஏசர் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பெரிய டிஸ்பிளேயுடன் பவர்ஃபுல் சவுண்ட் சிஸ்டமும் உள்ளது என்பது சிறப்பு. புதிய ஏசர் எச் ப்ரோ டிவி சீரிஸ் லேட்டஸ்டாக அந்த நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தொடரில் 43 முதல் 55 அங்குலங்கள் வரையிலான மூன்று ஸ்மார்ட் டிவிகள் உள்ளன. அனைத்து டிவிகளிலும் எல்இடி பின்னொளியுடன் கூடிய 4K ரெசல்யூஷன் எல்சிடி பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர, இந்த டிவிகள் மெல்லிய பெசல்களுடன் கூடிய ஃப்ரேம்லெஸ் டிசைனைக் கொண்டுள்ளன. ஸ்மார்ட் இணைப்புக்கான கூகுள் டிவி ஓஎஸ்ஸின் புதிய பதிப்புடன் இவை வருகின்றன. விலை எவ்வளவு, என்ன விசேஷம் என அனைத்தையும் விரிவாக தெரிந்து கொள்வோம்…