ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல் – 2023

2023 ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல் இம்முறை கொழுப்பில் இடம்பெறவுள்ளது.

“ஆசிய பாராளுமன்றங்களில் பாலின சமத்துவத்தின் சமமான பிரவேசத்தை ஏற்படுத்தல் மற்றும் பல்வகைத்தன்மை” எனும் தொனிப்பொருளில் ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது.

அதற்கமைய, இந்த ஒன்றுகூடல் மற்றும் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் ஒக்டோபர் 09 முதல் 11 வரை இடம்பெறும்.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஒக்டோபர் 09 ஆம் திகதி மு.ப. 10 மணிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுல்லே, பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும், ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள், வெளிநாடுகள் சிலவற்றின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிகளில் ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள், தேர்தல்கள் ஆணைக்குழு, அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் அங்கத்தவர்களுடன் கலந்துரையாடல்கள் மற்றும் கண்காணிப்பு விஜயங்கள் பலவற்றிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம், ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இணைந்து இம்முறை இந்த வருடாந்த ஒன்றுகூடலை ஏற்பாடு செய்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.