வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: செவி மாற்றுத்திறன் வழக்கறிஞர்கள் மற்றும் சாட்சிகளுக்கு உதவும் வகையில் இன்று( அக்.,06) முதல் உச்சநீதிமன்றத்தில் சைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், ‛‛ உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சைகை மொழிபெயர்ப்பாளர் ஒருவரை நாம் பெற்றிருக்கிறோம். செவி மாற்றுத்திறன் வழக்கறிஞர்கள் மற்றும் சாட்சிகள் நீதித்துறை நடவடிக்கைகளை புரிந்து கொள்ள இது உதவும்.
அரசியல்சாசன அமர்வு விசாரணையின் போது சைகை மொழி பெயர்ப்பாளர்நியமிக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன் ” என தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்த வழக்கறிஞர்கள், இது வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என புகழ்ந்துள்ளனர்.
முன்னதாக, செப்., 22 அன்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான வழக்கு ஒன்றில் சைகை மொழி பெயர்ப்பாளர் சவுரவ் ராய் சவுத்ரி உதவியுடன் செவிமாற்றுத்திறனாளி வழக்கறிஞர் சாரா சன்னியை விசாரித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு, வழக்கறிஞர்களும், பார் சங்கங்களும் வரவேற்பு தெரிவித்தன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement