ஐசிசி உலக கோப்பை 2023 தொடர் அகமதாபாத்தில் தொடங்கிவிட்டது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை, நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. இந்திய அணி முதல் போட்டியில் வரும் 8 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. இவ்விரு அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கிறது. ரவுண்ட் ராபின் முறையில் இந்த முறை உலக கோப்பை லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். புள்ளிப் பட்டியில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
முதல் மற்றும் நான்காவது இடத்தைப் பிடிக்கும் அணி நவம்பர் 15 ஆம் தேதி மும்பையில் முதல் அரையிறுதியிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது அணிகள் நவம்பர் 16 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியிலும் சந்திக்கும். இந்திய கிரிக்கெட் ரசிகர்களைப் பொறுத்தவரை லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியுடன் மோதும் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்போட்டியானது அக்டோபர் 14 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது.
கடைசியாக இவ்விரு அணிகளும் 2023 ஆசியக் கோப்பையின்போது சந்திக்க இருந்தன. மழை குறுக்கிட்டதால் அந்தபோட்டி கைவிடப்பட்டது. அதனால் உலக கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடுவதை ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்தவகையில் இப்போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. ஐசிசி ஆன்லைன் வெப்சைட் மற்றும் BookmyShow தளங்களில் ரசிகர்கள் ஆன்லைனில் டிக்கெட்டை புக் செய்யலாம்.
IND vs PAK போட்டிக்கு ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வழிமுறை:
– முதலில், BookMyShow இணையதளத்திற்குச் செல்லவும் அல்லது Play Store அல்லது App Store இலிருந்து செயலியை பதிவிறக்கவும்.
– இப்போது மேலே காட்டப்படும் ICC உலகக் கோப்பை 2023 மெனுவை கிளிக் செய்யுங்கள்
– அணி அல்லது மைதானம் வாரியாக போட்டிகளைக் கண்டறிய வேண்டுமா? என்பதைத் தேர்வுசெய்யவும். இதில், இந்திய அணி அல்லது அகமதாபாத் இடத்தைக் கிளிக் மூலம் தேர்வு செய்யவும்.
– அடுத்த பக்கத்தில், குறிப்பிட்ட அணி அல்லது மைதானத்தின் அனைத்து போட்டிகளையும் போட்டித் தேதிகளுடன் பார்க்க முடியும்.
– நீங்கள் செல்ல விரும்பும் போட்டியைத் தேர்ந்தெடுத்து அதனை கிளிக் செய்யவும்
– Select Seets என்பதை அழுத்தி இருக்கைகளின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுக்கவும். ஒரே நேரத்தில் இரண்டு இருக்கைகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
– அதன் பிறகு, இருக்கை கிடைக்கும் தன்மையைப் பொறுத்து நீங்கள் போட்டியைப் பார்க்க விரும்பும் ஸ்டாண்டைத் தேர்ந்தெடுக்கவும். டிக்கெட்டுகளின் விலை விவரங்கள் கீழே இருக்கும்.
– இப்போது நீங்கள் விரும்பும் ஸ்டாண்டில் கிளிக் செய்து, ஜூம் மூலம் இருக்கைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
– இதனையடுத்து உங்களுடைய டிக்கெட்டுக்கு பணம் செலுத்தினால், டிக்கெட் கன்பார்ம் ஆகும்.
– உங்கள் டிக்கெட் கொடுக்கப்படும் முகவரி அடிப்படையில் டோர் டெலிவரி செய்யப்படும்.