பெதனா ஆந்திராவில் அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக, ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபைக்கு அடுத்தாண்டு மத்தியில் தேர்தல் நடக்க உள்ளது. தெலுங்கு தேசம் கட்சி தலைவரான, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கிருஷ்ணா மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த கட்சி கூட்டத்தில், ஜனசேனா கட்சித் தலைவரும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் பேசியதாவது:
தெலுங்கு தேசம் கட்சி தற்போது வலுவில்லாமல் இருப்பதாக ஒரு மாயையை உருவாக்கியுள்ளனர். மாநிலத்துக்கு அந்தக் கட்சியின் அனுபவம் தேவை. அக்கட்சியின் அனுபவமும், நம்முடைய போர் குணமும் இணைந்தால், மிகவும் வலுவான அணியாக இருப்போம்.
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் இருந்தாலும், தெலுங்கு தேசத்துக்கு, 100 சதவீத ஆதரவு அளிக்க முன்வந்துள்ளேன். மாநிலத்தின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement