Hyundai Exter – ரூ.16,000 வரை ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் விலை உயர்ந்தது

அமோக வரவேற்பினை பெற்ற ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி காரின் விலையை ரூ.5,000 முதல் ரூ16,000 வரை வேரியண்ட் வாரியாக மாறுபட்ட வகையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் துவக்க நிலை EX வேரியண்டின் விலையில் மாற்றிமில்லாமல் ரூ.6 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.10.15 லட்சம் வரை விலை உள்ளது.

எக்ஸ்டர் காரில் 6000rpm-ல் 81 hp பவர், மற்றும் 113.8 Nm டார்க் 4000rpm-ல் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி என இரண்டிலும். சிஎன்ஜி ஆப்ஷனில் 6000rpm-ல் 69 hp பவர் மற்றும் 4000rpm-ல் 95.2Nm டார்க் வழங்கும். 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது.

Hyundai Exter Price hike

EX, EX(O) S, S(O) SX, SX(O), மற்றும் SX(O) Connect என மொத்தமாக 5 விதமான வேரியண்டுகளின் அடிப்படையில் மொத்தம் 18 வகைகளில் விற்பனைக்கு கிடைக்கின்றது. அதிகபட்ச விலை உயர்வை SX(O) Connect  MT ரூ.16,000 வரையும், SX (O) கனெக்ட் AMT டூயல் டோன் விலை ரூ.5,000 வரையும், மற்ற வேரியண்டுகள் ரூ.10,400 வரை எக்ஸ்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய எக்ஸ்டர் எஸ்யூவி காருக்கு இந்திய சந்தையில் போட்டியை ஏற்படுத்துகின்ற டாடா பஞ்ச், மாருதி இக்னிஸ், சிட்ரோன் சி3, ரெனால்ட் கிகர், மற்றும் மேக்னைட் எஸ்யூவி ஆகியவை உள்ளன.

ஹூண்டாய் எக்ஸ்டர் பெட்ரோல் என்ஜின் மைலேஜ் 19.4 Kmpl (MT), 19.2 Kmpl (AMT) மற்றும் எக்ஸ்டர் சிஎன்ஜி 27.1 Km/kg ஆகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.