Kanguva: வித்தியாசமான காட்சியமைப்பு; பரபர சண்டைக் காட்சி; 20 நாட்கள் ஷூட்டிங்!

மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பி வருகிறது சூர்யாவின் ‘கங்குவா’. படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நோக்கி, தீவிராக நடந்து கொண்டிருக்கிறது.

கொடைக்கானல், ராஜமுந்திரி ஆகிய இடங்களைத் தொடர்ந்து இன்று வெளிநாட்டில் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.

‘கங்குவா’ டீம்

‘சிறுத்தை’ சிவாவின் இயக்கத்தில் பல்வேறு வேடங்களில் சூர்யா நடித்து வரும் படம் ‘கங்குவா’. இதில் சூர்யாவின் ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். அவர்களுடன் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ், ஜெகபதிபாபு, நட்டி நட்ராஜ், ‘கே.ஜி.எஃப்’ அவினாஷ், கே.எஸ்.ரவிகுமார், கோவை சரளா, கருணாஸ் எனப் பலரும் நடிக்கின்றனர். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்து வருகிறார். தேவி ஶ்ரீபிரசாத் இசைமைக்கிறார்.

‘கங்குவா’வின் மிக முக்கிய கட்ட படப்பிடிப்பாக வெளிநாட்டு படப்பிடிப்பு இருக்கும் என்கிறார்கள். நேற்று தாய்லாந்தில் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. இதற்காக சூர்யா உள்பட படக்குழுவினர் புறபட்டுச் சென்றிருக்கின்றனர். கொடைக்கானல், ராஜமுந்திரியில் உள்ள அடர்ந்த காடுகளின் படப்பிடிப்பின் தொடர்ச்சியாக தாய்லாந்து படப்பிடிப்பு இருக்கும் என்கிறார்கள். அங்கேயும் போர்க்களக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளனர். சூர்யா தொடர்ச்சியாக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

சூர்யா

கொடைக்கானல், ராஜமுந்திரியில் தீப்பந்தங்களின் வெளிச்சங்களிலேயே சில காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. படத்தில் அந்தக் காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெரும்.

முற்றிலும் இயற்கை ஒளியில் படமாக்கப்பட்டிருப்பதைப் போல, வெளிநாட்டிலும் இயற்கை வெளிச்சத்தில் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

திஷா பதானி

இன்னொரு பக்கம் சூர்யா அடுத்து நடிக்கவிருக்கும் சுதா கொங்கராவின் பட வேலைகளும் தீவிரமாகி வருகின்றன. இரண்டு பெரிய நட்சத்திரங்கள் இப்போதைக்கு கமிட் ஆகியுள்ளனர். சுதாவின் படப்பிடிப்பு அனேகமாக அடுத்த மாதம், இரண்டாவது வாரத்தில் தொடங்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.