சென்னை: விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. விஜய்யின் ஆக்ஷன் வெறித்தனத்தை பார்த்த ரசிகர்கள், லியோ படத்தை பார்க்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்னொருபக்கம் விஜய்யின் தளபதி 68 ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தில் விஜய்யின் சம்பளத்திற்காக மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்களின் சம்பளத்தை தயாரிப்பு நிறுவனம் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
