What to watch on Theatre & OTT: இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?!

ரத்தம் (தமிழ்)

ரத்தம்

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்.’ திரில்லர் ஜானர் திரைப்படமான இது அக்டோபர் 6ம் தேதி வெளியாகியுள்ளது.

செய்தித்துறையைச் சுற்றி நடக்கும் அரசியல் மற்றும் அதன் பிரச்னைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டது இப்படம்.

இறுகப்பற்று (தமிழ்)

இறுகப்பற்று

யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இறுகப்பற்று.’ காதல், திருமணம், விவாகரத்து என உறவுகளுக்கிடையான சிக்கல்களைப் பேசும் இப்படம் அக்டோபர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

800 (தமிழ்)

‘800′ திரைப்படம்

எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் மஹிமா நம்பியார், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘800’. முன்னாள் ஶ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டது இதன் கதை. இப்படம் அக்டோபர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

The Road (தமிழ்)

The Road

அருண் வசீகரன் இயக்கத்தில் த்ரிஷா, ரோஸ் ஷபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Road.’ நெடுஞ்சாலையில் நடக்கும் தொடர் மர்மமான விபத்தின் பின்னணி என்ன என்பதுதான் இதன் கதைக்களம். க்ரைம், திரில்லர் திரைப்படமான இது அக்டோபர் 6ம் தேதி வெளியாகியுள்ளது.

Shot Boot Three (தமிழ்)

Shot Boot Three

அருணாசலம் வைத்தியநாதன் இயக்கத்தில் சினேகா, வெங்கட் பிரபு, யோகிபாபு, சிவாங்கி, பூவையார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Shot Boot Three.’ குழந்தைகள் செல்லமாக வளர்க்கும் விலையுயர்ந்த நாய் காணாமல் போய்விடுகிறது. அது கண்டுபிடிக்கப்பட்டதா, அதன் பின்னணி என்ன என்பதைப் பற்றிய ஜாலியான திரைப்படம் இது. இத்திரைப்படம் அக்டோபர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Chaaver (மலையாளம்)

Chaaver

டினு பாப்பச்சன் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், அர்ஜுன் அசோகன், ஆண்டனி பெப்பே, மனோஜ் கே யு, சஜின் கோபு, அனுரூப் இயக்கத்தில் உருவாகியுள்ள மலையாளத் திரைப்படம் ‘Chaaver.’ க்ரைம் திரில்லர் திரைப்படமான இது அக்டோபர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Rani (மலையாளம்)

Rani

சங்கர் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் மாலா பார்வதி, ஊர்வசி, பாவனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளத் திரைப்படம் ‘Rani.’ எம்.எல்.ஏ-வை மர்மானமுறையில் கொலை செய்த பலி வீட்டு வேலை பார்ப்பவர்மீது விழுந்துவிடுகிறது. இதன் உண்மையைக் கண்டுபிடிக்க இதையொட்டி நடக்கும் க்ரைம், அரசியல் திரில்லர் கதைதான் இப்படம். இத்திரைப்படம் அக்டோபர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Little Miss Rawther (மலையாளம்)

Little Miss Rawther

விஷ்ணு தேவ் இயக்கத்தில் கௌரி கிஷன், ஷெர்ஷா ஷெரீஃப், ஜிஷ்ணு ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Little Miss Rawther.’ காதல் ஜோடிகளுக்கிடையே நடக்கும் சண்டைகள், காதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஜாலியான காமெடி திரைப்படம் இது. இத்திரைப்படம் அக்டோபர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Month Of Madhu (தமிழ்)

Month Of Madhu

ஸ்ரீகாந்த் நாகோதி இயக்கத்தில் நவீன் சந்திரா, சுவாதி ரெட்டி, ஸ்ரேயா நவிலே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘Month Of Madhu.’ காதலித்துத் திருமணம் செய்து, விவாகரத்து வரை வந்து நிற்கும் இருவரின் உறவுச் சிக்கல்களைப் பற்றிப் பேசும் இப்படம் அக்டோபர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சுவாதி ரெட்டி காதலித்துத் திருமணம் செய்து அந்த உறவில் ஏற்படும் பிரச்னைகளால் விவாகரத்து பெற்றுவிடலாம் என்ற முடிவெடுத்துக் குழப்பத்தில் இருக்கிறார். இந்தியக் குடும்பங்களின் காதல், திருமண வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் ஒரு மார்டன் NRI பெண், அவர்கள் இருவரிடமும் அவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்வு குறித்துப் பேசுகிறார். விவாகரத்து பெற விரும்பும் சுவாதி ரெட்டியின் மனநிலை என்ன, அதன் பின்னணி என்ன என்பதே இதன் கதைக்களம்.

Rules Ranjann (தெலுங்கு)

Rules Ranjann

ரத்தினம் கிருஷ்ணா இயக்கத்தில் அபிமன்யு சிங், அன்னு கபூர், நேஹா ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘Rules Ranjann.’ கட்டுப்பாட்டுடன் வாழும் சாப்ட்வேர் பணியாளரான அபிமன்யூவின் வாழ்க்கை, அவரது பள்ளித் தோழியை மீண்டும் சந்தித்துக் காதலில் விழுந்த பிறகு மாறிவிடுகிறது. அதன் பிறகு அவர் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தது என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் அக்டோபர் 6ம் தேதி வெளியாகியுள்ளது.

Mad (தெலுங்கு)

Mad

கல்யாண் சங்கர் இயக்கத்தில் ரகுபாபு, ராச்சா ரவி, முரளிதர் கவுட், விஷ்ணு, அந்தோணி, ஸ்ரீகாந்த் ரெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘Mad.’ பல பெண்களுடன் ஜாலியாகச் சுற்றித் திரியும் கதாநாயகனை உண்மையாகக் காதல் செய்து அவரை மாற்றுகிறார் என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் அக்ட்டோபர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Maama Mascheendra (தெலுங்கு)

Maama Mascheendra

ஹர்ஷ வர்தன் இயக்கத்தில் சுதீர் பாபு, ஈஷா ரெப்பா, மிர்ணாலினி ரவி, ஹர்ஷ வர்தன், அலி ரெசா, ராஜீவ் கனகலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Maama Mascheendra.’ இரண்டு நண்பர்களின் காதல், கலாட்டா திரைப்படமான இது அக்டோபர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Raja Marthanda (கன்னடம்)

RajaMarthanda

கே. ராம்நாராயணன் இயக்கத்தில் சிரஞ்சீவி சர்ஜா, தேவராஜ், வினீத் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Raja Marthanda.’ ஆக்‌ஷன், திரில்லர் திரைப்படமான இது அக்டோபர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Thank you for coming (இந்தி)

Thank you for coming

கரண் பூலானி இயக்கத்தில் பூமி பெட்னேகர், டோலி அலுவாலியா, ஷிபானி பேடி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தித் திரைப்படம் ‘Thank you for coming.’ நெருங்கிய நண்பர்கள் நீண்டநாள்களுக்குப் பிறகு சந்தித்து தங்களின் வாழ்வில் நடந்த சீக்ரெட்டான விசயங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் அக்டோபர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Mission Raniganj (இந்தி)

Mission Raniganj

டினு சுரேஷ் தேசாய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், பரினீதி சோப்ரா, ராஜேஷ் சர்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தித் திரைப்படம் ‘Mission Raniganj.’ கனிமச் சுரங்கத்தில் மாட்டிக்கொள்ளும் 60க்கும் மேற்பட்ட பணியாளர்களை அங்கு இன்ஜினீயராக இருக்கும் அக்‌ஷய் குமார் அனைவரையும் எப்படிக் காப்பாற்றினார் என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் அக்டோபர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வார வெப்சீரிஸ்

The Great Indian Suicide (தெலுங்கு)

The Great Indian Suicide

ராம் கார்த்திக், ஹெபா படேல் முக்கிய வேடங்களில் மற்றும் விகே நரேஷ், பவித்ரா லோகேஷ் மற்றும் ஜெய பிரகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘The Great Indian Suicide.’ மூடநம்பிக்கையால ஒரு குடும்பமே ஒரே நேரத்தில் தற்கொலை செய்துகொள்வதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Aha’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

Khufiya (இந்தி) – Netflix

Khufiya

விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் தபு, அலி பசல், வாமிகா கபி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Khufiya.’ க்ரைம், ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது அக்டோபர் 5ம் தேதி ‘Netflix’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது. 

உளவுத்துறை அதிகாரியாக இருக்கும் தபு, முக்கிய தீவிரவாதி ஒருவரைப் பிடிக்கும் வேட்டையில் தனது டீமுடன் இறங்குகிறார். அவருக்கு என்ன நடந்தது, நாட்டையும் தன்னையும் தீவரவாதியின் குடும்பத்தையும் காப்பாற்றி அந்தத் தீவிரவாத கும்பலைப் பிடித்தாரா என்பதுதான் இதன் கதைக்களம். 

Sister Death (ஆங்கிலம்) – Netflix

Sister Death

பேகோ பிளாசா இயக்கத்தில் ஆரியா பெட்மர், அல்முதேனா அமோர், மாரு வால்டிவில்சோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கிலத் திரைப்படம் ‘Sister Death.’ ஒரு முன்னாள் கான்வென்ட் மாணவரான நர்சிசா, பெண்களுக்கான பள்ளி, ஆசிரியராகப் பணியாற்றுகிறார். ஒரு கட்டத்தில் அவரைச் சுற்றி அமானுஷ்ய விசியங்கள் அவரைப் பின்தொடர்ந்து தொந்தரவு செய்கிறது. அதன் பின்னணி என்ன, அதிலிருந்து அவர் மீண்டாரா என்பதுதான் இதன் கதைக்களம். ஹாரர், திரில்லர் திரைப்படமான இது அக்டோபர் 5ம் தேதி ‘Netflix’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

Totally Killer (தமிழ்) – Amazon Prime Video

Totally Killer

சீரியல் கில்லராl கொலை செய்யப்பட்ட கதாநாயகி, மரணித்து 1987க்குச் சென்றுவிடுகிறார். அங்கு அந்த சீரியல் கில்லரைப் பார்த்து நடந்ததை, அவரை சீரியல் கில்லராக மாற்றிய சம்பவத்தை மாற்ற முயல்வதுதான் இதன் கதைக்களம். க்ரைம் திரில்லரை ஜாலியான பாணியில் சொல்லும் இப்படம் அக்டோபர் 6ம் தேதி ‘Amazon Prime Video’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

Fair Play (ஆங்கிலம்) – Netflix

Fair Play

சோலி டோமண்ட் இயக்கத்தில் ஃபோப் டைனெவர், ஆல்டன் எஹ்ரென்ரிச் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Fair Play.’ ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் இருவர் காதலித்துத் திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களுக்கிடையான சண்டை, காதல் உள்ளிட்டவைதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் அக்டோபர் 6ம் தேதி ‘Netflix’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

Keys to Heart (தகலாக் – ஸ்திரேலிய மொழி) – Netflix

Keys to Heart

சுங்-ஹியூன் சோய் இயக்கத்தில் லீ பியுங்-ஹன், ஜியோங் மின் பார்க், ஹான் ஜி-மின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தகலாக்- ஆஸ்ட்ரேலிய மொழித் திரைப்படமான இது அக்டோபர் 6ம் தேதி ‘Netflix’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

குத்துச்சண்டை வீரராக இருக்கும் கதாநாயகன் மனநலம் பாதிக்கப்பட்ட தன் சகோதரரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதுதான் இதன் கதைக்களம்.

A Deadly Invitation (ஆங்கிலம்) – Netflix

A Deadly Invitation

ஜே.எம் கிராவியோடோ இயக்கத்தில் ரெஜினா பிளாண்டன், மனோலோ கார்டோனா, பெட்ரோ டாமியன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘A Deadly Invitation.’ காதல், காமெடி கலந்த திரில்லர் திரைப்படமான இது அக்டோபர் 6ம் தேதி ‘Netflix’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. 

ஐந்து பேரைக் காதலித்துத் திருமணம் செய்து யாருடனும் ஒத்துப்போகாததால் விரக்தியில் தற்கொலை செய்து கொள்கிறார் கதாநாயகி. அதன் பின்னணி என்ன என்று பிரச்னையில் மாட்டிக்கொண்டு அதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள்  அவரின் நண்பர்கள். உண்மையில் அவளின் மர்மமான மரணத்திற்குக் காரணம் என்ன, அதன் பின்னனி என்ன என்பதே இதன் கதைக்களம்.

இந்த வார வெப்சீரிஸ்

Mumbai Diaries Season 2 – Amazon Prime Video

Mumbai Diaries Season 2

நிகில் அத்வானி இயக்கத்தில் மோஹித் ரெய்னா, கொங்கனா சென் சர்மா, ஸ்ரேயா தன்வந்தரி, நடாஷா பரத்வாஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி வெப்சீரிஸ் ‘Mumbai Diaries Season 2.’ மும்பையில் நடக்கும் குற்றச் சம்வங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘Mumbai Diaries’ சீசனின் இரண்டாவது சீசனாகும் இது. இந்த வெப்சீரிஸ் அக்டோபர் 6ம் தேதி ‘Amazon Prime Video’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

Everything Now (ஆங்கிலம்) -Netflix

Everything Now

சார்லி மாண்டன், அலிசா மெக்லேலண்ட் ஆகியோர் இயக்கத்தில் சோஃபி வைல்ட், விவியென் அச்செம்பாங், லூகா ஸ்லேட் உருவாகியுள்ள திரைப்படம் ‘Everything Now.’ மருத்துவமனையில், தனிமையில் நீண்ட நாள்கள் கஷ்டப்பட்ட பிறகு உலகை ரசிக்க ஆசைப்படும் சிறுமி, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதுதான் இதன் கதைக்களம். ஜாலியான நகைச்சுவை நிறைந்த இத்திரைப்படம் அக்டோபர் 6ம் தேதி ‘Netflix’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

Loki S2 – Disney+ Hotstar

Loki S2

கேட் ஹெரான், ஜஸ்டின் பென்சன், ஆரோன் மூர்ஹெட் ஆகியோர் இயக்கத்தில் டாம் ஹிடில்ஸ்டன் நடிப்பில் உருவாகியுள்ள் மார்வெல் வெப்சீரிஸ் இந்த ‘Loki S2.’ ‘அவஞ்சர்ஸ் எண்ட் கேம்மில்’ தப்பித்த லோகி, காலச் சக்கரத்தைக் கட்டுப்படுத்தும் நோ வேரைக் கொன்றுவிடுகிறார். அதன் பின் என்னவெல்லாம் நடந்தது என்பது இதன் கதைக்களம். 2021-ம் ஆண்டு வெளியான முதல் சீரிஸின் தொடர்ச்சியான இந்த இரண்டாவது சீசன் ‘Disney+ Hotstar’ ஓ.டி.டி தளத்தில் அக்டோபர் 6ம் தேதி முதல் வெளியாகிறது.

Lupin part 3 (பிரெஞ்சு) – Netflix

Lupin part 3

லூயிஸ் லெட்டரியர், ஹ்யூகோ கெலின், லுடோவிக் பெர்னார்ட், மார்செலா செட் ஆகியோர் இயக்கத்தில் லுடிவின் சாக்னியர், ஈடன் சைமன், அன்டோயின் கோய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில வெப்சீரிஸ் ‘Lupin part 3.’ அசாசைன் எனும் கொள்ளைக்காரனின் ஆக்‌ஷன், திரில்லர் நிறைந்த கதைதான் இதன் கதைக்களம். இந்த வெப்சீரிஸ் அக்டோபர் 6ம் தேதி ‘Netflix’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

தியேட்டர் டு ஓ.டி.டி

ஹர்காரா (தமிழ்) – Amazon Prime Video

ஹர்காரா – சினிமா விமர்சனம்

ராம் அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில் ராம் அருண் காஸ்ட்ரோ, காளி வெங்கட், பிச்சைக்காரன் மூர்த்தி, கௌதமி சௌத்ரி, ஜெய பிரகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹர்காரா.’ தேனி கிராமத்தில் நடக்கும் காதல், காமெடி, ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது ‘Amazon Prime Video’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

தேனி மாவட்ட மலைக் கிராமம் புதிதாகத் தபால்காரராகப் பணியாற்ற வந்துள்ள காளி வெங்கட், அங்கிருக்கும் மக்களிடம் தபாலைக் கொண்டு சேர்க்கப் பாடாய்ப்படுகிறார். காளி வெங்கட்டின் இந்தத் தபால்காரப் பயணத்தில் ஒரு தபாலை வெகுதொலைவில் மலை ஏறிக் கொண்டு செல்லும் சவாலைச் செய்ய முயல்கிறார். அப்பயணத்தில் அவருடன் வழிகாட்டியாக வரும் ஒருவர் வெள்ளைக்காரன் காலத்தில் பணியாற்றிய இந்தியாவின் முதல் தபால்காரரான ‘ஹர்காரா’ என்பவரின் காதல் கலந்த வீர தீரக் கதையைச் சொல்வதுதான் இதன் கதைக்களம்.

குஷி (தெலுங்கு, தமிழ், இந்தி) – Netflix

குஷி

ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், இந்தி எனப் பல மொழிகளில் வெளியான ‘குஷி’ திரைப்படம் தற்போது ‘Netflix’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது. திருமணத்திற்குப் பின் காதல் ஜோடிகளுக்கிடையே நடக்கும் காதல், சண்டைகள்தான் இதன் கதைக்களம்.

Miss Shetty Mr Polishetty (தெலுங்கு) – Amazon Prime Video

Miss Shetty Mr Polishetty

மகேஷ் பாபு இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி, நவீன் பாலிஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘Miss Shetty Mr Polishetty’. காதல், காமெடி திரைப்படமான இது தற்போது ‘Amazon Prime Video’ ஓ..டிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

வாழ்வில் நடந்த பிரச்னைகளால் ஆண்களை வெறுக்கும் அனுஷ்கா, யாருமின்றித் தனிமையில் வாழ்கிறார். ஒருகட்டத்தில் தனக்குக் குழந்தை ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என முடிவெடுக்கிறார். அதற்காகத் தனக்குப் பிடித்த ஆணைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார். இதற்கிடையில் அனுஷ்காவின் வாழ்வில் வரும் ஸ்டேண்டப் காமெடியனாக இருக்கும் கதாநாயகன், அனுஷ்காவிற்குப் பிடித்தபடி இருக்கிறாரா, அனுஷ்கா அவரை ஏற்றுக்கொண்டாரா என்பதுதான் இதன் கதைக்களம்.

Mr. Pregnant (தெலுங்கு) – Amazon Prime Video

Mr. Pregnant

கர்ப்பமான ஆணின் வித்தியாசமான கதைதான் இதன் கதைக்களம். சையத் சோஹல், ரூபா கொடுவாயூர், சுஹாசினி மணிரத்னம், ராஜா உள்ளிட்டோர் நடிப்பில், திரையரங்குகளில் வெளியாகியிருந்த இப்படம் தற்போது ‘Amazon Prime Video’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

Gadar 2 (இந்தி) Zee5

Gadar 2

அனில் சர்மா இயக்கத்தில் சன்னி தியோல், அமீஷா படேல், உத்கர்ஷ் சர்மா, மனிஷ் வாத்வா, கௌரவ் சோப்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘Gadar 2.’ பீரியாடிக் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது ‘zee5’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தனியாகப் பிரிக்கப்பட்டபோது நடக்கும் காதலர்களின் பிரிவு மூலம் அப்போது நடந்த அரசியல் பிரச்னைகளைப் பற்றிப் பேசும் படமாக 2001-ல் வெளியானது ‘Gadar’ திரைப்படம். இதன் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ளது இப்படம்.

முதல் பாகத்தில் காதல் மனைவியைப் பிரிந்து பாகிஸ்தானில் குடியமர்த்தப்படும் கணவன் தன் மனைவியையும் மகனையும் காண மீண்டும் இந்தியா வருகிறார். அதனால் நடக்கும் பிரச்னைகள், அரசியல் மற்றும் 1971-ல் நடந்த இந்தியா- பாகிஸ்தான் போர் உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்ட கதைக்களம் இது.

Spider-Man: Across the Spider-Verse (ஆங்கிலம்) – Netflix

Spider-Man Across The Spider-verse

ஜோகிம் டாஸ் சாண்டோஸ், கெம்ப் பவர்ஸ், ஜஸ்டின் கே. தாம்சன் ஆகியோர் இயக்கத்தில் ஷமேக் மூர், ஹெய்லி ஸ்டெய்ன்ஃபீல்ட், ஆஸ்கர் ஐசக் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படம் `ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்’ (Spider-Man Across The Spider-verse). திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Netflix’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

Haunted Mansion (ஆங்கிலம்) – Disney+ Hotstar

Haunted Mansion

ஜஸ்டின் சிமியன் இயக்கத்தில் லகீத் ஸ்டான்ஃபீல்ட், ரொசாரியோ டாசன், ஓவன் வில்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Haunted Mansion.’ மாயஜாலங்களும் மர்மங்களும் நிறைந்த ஹாரர் காமெடி திரைப்படமான இது ‘Disney+ Hotstar’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஒரு பெண் பிரம்மாண்டமான விடுதி ஒன்றை விலைக்கு வாங்குகிறார். ஆனால், பேய்களும், மாயஜால சக்திகளும் அங்கு யாரையும் தங்கவிடாமல் தொந்தரவு செய்கின்றன. இப்பிரச்னைகளைச் சரிசெய்யவும், அங்கிருக்கும் பேய்களையும் மாயஜால சக்திகளையும் விரட்டவும் முயற்சி செய்கிறார் அப்பெண். அதற்காக ஒரு சுற்றுலா வழிகாட்டி, ஒரு மனநோயாளி, ஒரு பாதிரியார் மற்றும் ஒரு வரலாற்றாசிரியரைக் கொண்ட குழு ஒன்றைப் பணியமர்த்துகிறார். இறுதியில் அக்குழு அப்பேய்களை வெறியேற்றியதா, அங்கு என்ன நடந்தது என்பதை காமெடி கலந்த திரில்லராகச் சொல்லும் படம் இது.

Insidious: The Red Door (ஆங்கிலம்) – Netflix

Insidious: The Red Door

பேட்ரிக் வில்சன் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ‘Insidious: The Red Door.’ டை சிம்ப்கின்ஸ், ரோஸ் பைரன் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். ஹாரர், திரில்லர் திரைப்படமான இது திரையரங்குகளில் வெளியாகியிருந்த நிலையில் தற்போது ‘ Netflix’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

இதன் முதல் இரண்டு பாகங்களின் தொடர்ச்சிதான் இப்படம். முந்திய பாகங்களில் சிறுவனாக இருந்த டால்டன் தற்போது வளர்ந்து கல்லூரி செல்கிறார். அங்கு அவருக்கு மீண்டும் அமானுஷ்ய மிருகமான டீம்மன்ஸின் நினைவுகள் வருகின்றன. அதன் பிறகு அவர் தனது வாழ்வில் நிறைய பிரச்னைகளை எதிர்கொள்கிறார். சைக்கலாஜிக்கலாகவும் பாதிக்கப்படுகிறார். இந்தப் பிரச்னைகளிலிருந்து அவர் மீண்டு வந்தாரா, இல்லையா என்பதுதான் இதன் கதைக்களம்.

இந்த வாரம் உங்களின் சாய்ஸ் என்ன என்பதை கமென்டில் பதிவிடவும். அடுத்த வாரம் இன்னும் பல சிறந்த படங்களுடன் சந்திக்கலாம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.