வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹாங்சு: ஆசிய விளையாட்டில் வில் வித்தையில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியா வீராங்கனைகள் ஜோதி சுரேகா தங்கமும், அதிதி சுவாமி வெண்கலமும் வென்றனர். இந்தியா இதுவரை 23 தங்கம், 34 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது.
சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விளையாட்டாக ஆசிய விளையாட்டுப் போட்டி கொண்டாடப்படுகிறது. 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தற்போது நடந்து வருகிறது.
இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு நாளும் இந்தியா வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
வில்வித்தை
ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. தென்கொரிய வீராங்கனையை 149- 145 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி ஜோதி தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா இதுவரை 3 தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
வெண்கலம்
வில்வித்தை போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அதிதி சுவாமி வெண்கலம் வென்றார்.
பதக்கப்பட்டியல்
இந்தியா இதுவரை 23 தங்கம், 34 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement