ஐசிசி உலக கோப்பை 2023 போட்டிகளுக்காக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் பிரத்யேக டேட்டா பிளான்களை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளன. ஏர்டெல் நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு உகந்த வகையில் இரண்டு உலக கோப்பை அன்லிமிட்டெட் டேட்டா பிளான்களை அறிவித்திருக்கிறது.
ஏர்டெல் கிரிக்கெட் டேட்டா திட்டங்கள்
ஏர்டெல் கிரிக்கெட் ரசிகர்களுக்காக இரண்டு சிறப்பு டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஐசிசி உலகக் கோப்பை 2023-ன் ஒவ்வொரு தருணத்தையும் எந்த இடையூறும் இல்லாமல் பார்க்கலாம். இந்த திட்டங்கள் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கின்றன. என்னென்ன திட்டங்கள் வந்திருக்கிறது என்று பார்ப்போம்…
ஏர்டெல் 99 திட்டம்
ஏர்டெல் நிறுவனம் கிரிக்கெட் பிரியர்களுக்கான சிறப்பு டேட்டா திட்டத்தை ரூ.99க்கு மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் 2 நாட்களுக்கு வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. எனவே ஐசிசி உலகக் கோப்பை 2023 இன் ஒவ்வொரு தருணத்தையும் எந்த இடையூறும் இல்லாமல் பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ 49 திட்டம்
இதேபோல் ஏர்டெல் நிறுவனம் கிரிக்கெட் பிரியர்களுக்காக மற்றொரு மலிவு விலையில் டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ரூ.49க்கு மட்டுமே கிடைக்கிறது. இந்தத் திட்டம் ஒரு நாளைக்கு 6 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் அன்றைய நாள் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை எந்த இடையூறும் இல்லாமல் பார்த்து மகிழலாம்.
உலக கோப்பை சேனல்கள்
இந்தியாவில் நடைபெறும் ICC ODI உலகக் கோப்பை 2023-ன் நேரடி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. எனவே, போட்டியின் அனைத்து விளையாட்டுகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் நேரடியாகக் கிடைக்கும். பகல் நேர ஆட்டங்கள் இந்திய நேரப்படி காலை 10:30 மணிக்கும், பகல்-இரவு போட்டிகள் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கும் தொடங்கும்.
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஆகியவற்றில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஹிந்தி எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 கன்னடம் ஆகிய சேனல்களில் பார்க்கலாம்.
செயலியில் பார்ப்பவர்கள், 2023 ODI உலகக் கோப்பையின் நேரடி ஸ்ட்ரீமிங் இந்தியாவில் Disney + Hotstar ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் கண்டு ரசிக்கலாம். அனைத்து போட்டிகளும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் செயலியில் இலவசமாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.