![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/NTLRG_20231006182909273401.jpg)
விடாமுயற்சியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
நடிகர் அஜித்குமார் துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு கிட்டத்தட்ட 9 மாதங்கள் கழித்து தனது அடுத்த படமான 'விடாமுயற்சி' படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இதனை மகிழ்திருமேனி இயக்குகிறார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் துவங்கி உள்ளது.
இதில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்கின்றார். மற்றொரு கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது திடீர் மாற்றமாக ஹூமா குரேஷிக்கு பதிலாக கேடி பில்லா, நெஞ்சம் மறப்பதில்லை, சரவணன் இருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்த ரெஜினா கசண்டரா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.