சென்னை: வருவாய், பேரிடர் மேலாண்மை துறை செயலர் வே.ராஜாராமன் வெளியிட்டுள்ள அரசாணை:
கடந்த 2020-21, 2021-22, 2022-23 ஆகிய ஆண்டுகளுக்கான பணிமாறுதல் மூலம் நியமனம் பெறும் துணை ஆட்சியர்களுக்கான பட்டியல் அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு குடிமைப் பணியில் பதவி உயர்வு மூலம் 40 வட்டாட்சியர்களை துணை ஆட்சியர்களாக குறிப்பிட்ட பணியிடங்களில் நியமனம் செய்து அரசாணை வெளியிடப்படுகிறது. சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை, வட்டாட்சியர்கள் (வருவாய் பிரிவு)பா.ஐவண்ணன், சு.பார்த்தசாரதி, ரா.ஆனந்த மகாராஜன், டி.சசிகலா ஆகியோர் திருவள்ளூர் மாவட்ட கலால் மேற்பார்வை அலுவலர், நில நிர்வாக ஆணையரக துணை ஆட்சியர், முதல்வரின் முகவரி துறை குறைதீர்வு மேற்பார்வை அலுவலர், எல்காட் மனிதவள பொது மேலாளர் ஆகியபொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள வட்டாட்சியர்களின் பேரில் எந்த குற்றச்சாட்டும் இல்லை என்பதை, பொறுப்பில் இருந்து விடுவிக்கும் முன்பு ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.