வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்டாக்ஹோம்: அமெரிக்காவை சேர்ந்த கிளாடியா கோல்டினுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனை சேர்ந்த ஆய்வாளர் ஆல்ப்ரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் நோபல் பரிசு அளிக்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என ஆறு துறைகளில் சாதனை படைத்தோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும். அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அக்.,2 முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (அக்.,5) பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த பொருளாதார வரலாற்று ஆசிரியர், தொழிலாளர் பொருளாதார நிபுணரான கிளாடியா கோல்டினுக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண் – பெண் தொழிலாளர் இடையிலான வருவாய் வேறுபாடுகள் குறித்த காரணங்களை கண்டறிந்ததற்காக இந்த பரிசு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement