கெய்ரோ : எகிப்தில், சுற்றுலா பயணியர் மீது போலீஸ்காரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இஸ்ரேலைச் சேர்ந்த இருவர் உட்பட மூவர் பலியாகினர்.
தென்மேற்கு ஆசிய நாடான எகிப்தில் உள்ள சுற்றுலா நகரமான அலெக்சாண்டிரியாவில், செராபியம் பகுதியில் பழங்கால ரோமானிய நினைவுச் சின்னம் உள்ளது.
இங்கு ஏராளமான சுற்றுலா பயணியர் நாள்தோறும் வருவது வழக்கம். மேற்காசிய நாடான இஸ்ரேலில் இருந்து குழு ஒன்று நேற்று அங்கு சென்றது. அப்போது, அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர் இஸ்ரேலியக் குழு மீது திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு பாய்ந்ததில், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
எகிப்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தார். மேலும் சிலர் காயமடைந்ததை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்த பாதுகாப்புப் படையினர், துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ்காரரை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகள் இடையே பயங்கர தாக்குதல் நடந்து வரும் சூழலில், இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது எகிப்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement