கில்லுக்கு பதில் இஷான் வேண்டாம்… இவரை போடுங்க – அதிரடி ஆட்டம் கன்பார்ம்

IND vs AFG, Shumban Gill Replacement: இந்தியா அதன் 2023 உலகக் கோப்பை (ICC World Cup 2023) பயணத்தை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. அதுவும் ஆஸ்திரேலிய அணியை 199 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி, பேட்டிங் டாப் ஆர்டர் பேட்டர்கள் மூன்று பேர் டக்-அவுட்டான பின் போராடி 200 ரன்களை எடுத்து எளிதில் மறக்க முடியாத வெற்றியை பதிவு செய்துள்ளது. 

மூன்று உலகக் கோப்பையை நோக்கிய இந்திய அணியின் பயணம் நேற்றுதான் தொடங்கியது என்றாலும், இந்த நீண்ட பயணத்தில் இத்தகைய வெற்றி பெரிது என்றாலும், கோப்பையை வெல்ல நேற்றைய அணியில் பல பலவீனங்கள்  வெளிப்பட்டன. பந்துவீச்சில் பெரிதாக நேற்று குறைக் கூற முடியாது என்றாலும் சிறு சிறு பிரச்னைகளும் தென்பட்டன. 

ஆனால், இந்திய அணிக்கு பேட்டிங் துறையும் சற்று கவனம் செலுத்த வேண்டிய இடமாக உள்ளது. 7, 8ஆவது இடத்தில் இறங்கும் ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் நிச்சயம் பேட்டிங்கில் பங்களிப்பை அளித்தால்தான் இந்தியா பெரிய ஸ்கோரை நோக்கி நகர இயலும். அதேபோல் மிடிலில் விராட், ராகுல், ஹர்திக் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். சுப்மான் கில் இல்லாத நிலையில் ஓப்பனிங்கும் தற்போது சற்று தொய்வான நிலையில் உள்ளது. 

சுப்மான் கில் உடல்நலக்குறைவால் முதல் போட்டியை போன்று ஆப்கானிஸ்தான் (IND vs AFG) உடனான அடுத்த போட்டியையும் தவறவிடவே அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் அக். 14ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. எனவே, கில் இடத்தை நிரப்பப்போவது அடுத்தப் போட்டியிலும் இஷான் கிஷான் தானா என்ற கேள்வி தற்போதும் எழுந்துள்ளது. 

இஷான் கிஷன் (Ishan Kishan) ஓப்பனிங்கில் திணறுகிறார் என்ற விஷயம் நேற்றும் உறுதியானது. எனவே, அவருக்கும் மேலும் ஒரு வாய்ப்பை அளிப்பது சரியாக இருக்காது என சிலர் கருதுகின்றனர். அவர் மிடிலில் ஷ்ரேயாஸிற்கு பதில் விளையாடலாம் ஒரு தரப்பு கூறினாலும், ஷ்ரேயாஸ் நம்பர் 4 இடத்தில் தொடர்ச்சியாக நன்றாக விளையாடி உள்ளார். அவருக்கு தொடர்ந்து வாய்ப்பை வழங்குவது தொலைநோக்கான முடிவாக இருக்கும் என சிலர் கருதுகின்றனர். 

அந்த வகையில் அடுத்த போட்டியில் இஷான் கிஷனுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது. எனவே, கில்லின் ஓப்பனிங் இடத்தில் டாப் பார்மில் இருக்கும் ராகுலை முயற்சித்து பார்க்கலாம் என்றும் அடுத்து விராட், ஷ்ரேயாஸ், ஹர்திக் ஆகியோர் அடுத்தடுத்து பேட்டிங் செய்ய வைக்கலாம் என்றும் கூறுகின்றனர். அதன்மூலம், சூர்யகுமார் யாதவ் 6ஆவது வீரராக இறங்கி ஃபினிஷர் ரோலை மேற்கொள்ளலாம் என்றும் முதல் பேட்டிங் என்றால் பழைய பந்தில் அதிரடி ஆட்டத்தை எதிர்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. 

கில் அணிக்குள் வரும்போது ஒரு ஸ்பின்னரை அணியில் இருந்து தூக்கியாக வேண்டும். தற்போது கில் இல்லாத சூழலிலேயே சூர்யகுமார் இதற்கு சரிப்பட்டு வருவாரா என்பதை ரோஹித் – ராகுல் டிராவிட் இணை சோதித்துப் பார்க்க ஆப்கான் போட்டியே சிறந்தது எனவும் கூறுகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.