சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் இன்று (அக்-9) காலை கூடியது. அவை கூடியதும் மறைந்த உறுப்பினர்கள் லியாவுதீன்சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து , விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சட்டசபை கூடியதும் சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். மறைந்த உறுப்பினர்கள் லியாவுதீன்சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து , கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோர் மறைவு பேரிழப்பாகும். அவர்களது சேவை என்றும் போற்றுதலுக்குரியது.
அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் , பசிப்பிணி ஒழிப்பு வறுமை ஒழிப்புக்காக அரும்பாடுபட்டவர், உணவு பஞ்சத்தை போக்கியவர். பசுமைபுரட்சியாளர் , பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர் , அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம் என சபாநாயகர் புகழாரம் சூட்டினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement