யூதர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், என மும்மதத்தினருக்கும் புனித தலமாக கருதப்படும் அல்-அக்ஸா வழிபாட்டுத்தலம் பாலஸ்தீனத்தில் அமைந்திருக்கிறது. அதனால், மும்மததினருக்கும் முக்கியத்தளமாக் கருதப்படும் பாலஸ்தீனத்தில், யூத மக்களுக்காக ஒரு தேசிய நிலம் வேண்டும் என 1917-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசின் வெளியுறவுத்துறைச் செயலர் ஆர்தர் பால்ஃபோர் (Arthur Balfour), பிரிட்டிஷ் யூத மத தலைவர் ரோத்ஸ்சைல்ட் (Lord Rothschild) க்கு கடிதம் எழுதினார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/Untitled_design__61_.jpg)
இந்தக் கடிதம் பால்ஃபோர் பிரகடனம் (Balfour Declaration) எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பிரகடனம் 9 நவம்பர் 1917 அன்று பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் பாலஸ்தீனம் பிரிட்டிஷ் அரசின் காலனி ஆதிக்கத்தில் இருந்தது. அதைத் தொடர்ந்து, யூத ஏஜென்ஸி எனும் அமைப்பின் தலைவராக இருந்த டேவிட் பென்-குரியன் (David Ben-Gurion) 1945 -ம் ஆண்டு பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான தனி நாடு கோரிக்கையை மீண்டும் முன்வைத்தார்.
இந்தக் கோரிக்கையை அப்போதைய அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் (Franklin D. Roosevelt)ஆதரித்தாலும், யூதர்கள் மற்றும் அரேபியர்களை கலந்தாலோசிக்காமல், அமெரிக்கா இதில் தலையிடாது என உறுதியாக தெரிவித்தார். 1948 வரை பாலஸ்தீனத்தை காலனி ஆதிக்கத்தில் வைத்திருந்த பிரிட்டிஷ் அரசு, பாலஸ்தீனத்தில் யூத அரசு மற்றும் அரபு நாடு உருவாக்கப்படுவதையும், யூத அகதிகளை எல்லை குறிப்பிடாமல் அப்பகுதிக்கு குடியேற்றுவதையும் எதிர்த்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1696829657_499_Untitled_design__11_.png)
பாலஸ்தீனத்தின் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்க பிரிட்டிஷ் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி எஸ். ட்ரூமன் (President Harry S. Truman) மே 1946-ல், ஹிட்லரின் படைகளால் ஜெர்மனியில் இருந்து விரட்டப்பட்ட 100,000 யூத மதத்தைச் சேர்ந்தவர்களை பாலஸ்தீனத்திற்குள் அனுமதிப்பதற்கான பரிந்துரையை அங்கீகரித்தார். அதே ஆண்டு அக்டோபரில் யூத அரசை உருவாக்குவதற்கான தனது ஆதரவை, பகிரங்கமாக தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, 1947 முழுவதும், பாலஸ்தீனத்திற்கான ஐநா சபை சிறப்பு ஆணையம் அமைத்து, பாலஸ்தீன பிரச்சினையை ஆராய்ந்து, பாலஸ்தீனத்தை யூத மற்றும் அரபு நாடாக பிரிக்க நவம்பர் 29, 1947-ல் 181 (பிரிவினைத்) தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. பாலஸ்தீன அரசு மற்றும் மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தங்கள் நாட்டை பிரித்து வேறு குழுவினருக்கு வழங்குவதை அதன் பூர்வ குடிகள் விரும்பவில்லை.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/WhatsApp_Image_2021_06_18_at_5_50_30_PM__5_.jpeg)
பல போர்கள் வெடித்தன. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் படைபலத்தை அதிகரித்த இஸ்ரேல், பாலஸ்தீனின் நிலங்களை கைப்பற்றிக்கொண்டே வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், பாலஸ்தீனத்தின் அரசியல் கட்சியாக விளங்கும் ஹமாஸ் குழு தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் பாலஸ்தீனம் – இஸ்ரேல் இடையே, பாலஸ்தீனத்தின் போராளிக் குழுவான ஹமாஸ் போர் தொடுத்திருக்கிறது. இஸ்ரேலும் எதிர் தாக்குதலை நடத்தி வருக்கிறது. இரு தரப்பிலும் 1,100 -க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள். இதற்கிடையில், இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தரை-கடல்-வான் வழித் தாக்குதலில் பல அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
கொல்லப்பட்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கை, அவர்களின் அடையாளங்கள் போன்ற விவரங்களை அமெரிக்கா வெளியிடவில்லை. அதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று இஸ்ரேலுக்கு அமெரிக்க கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்ப உத்தரவிட்டார். இதன் மூலம் போராளிக்குழுவான ஹமாஸின் தீவிரமான தாக்குதல்களை எதிர்கொள்ள இஸ்ரேலுக்கான ஆதரவை அமெரிக்கா வழங்கியிருக்கிறது.
மேலும், விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டையும் அதனுடன் வரும் போர்க்கப்பல்களையும் கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு அனுப்பியிருக்கிறது. மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தப் பகுதியில் போர் விமானப் படைகளை மேம்படுத்துவதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கு கூடுதல் உதவிகளை வழங்குவதாகவும் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசியபோது உறுதியளித்திருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.
இதனிடையே, அமெரிக்கா இந்த போரில் உதவினாலும், எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என ஹமாஸ் குழுவினர் தெரிவித்துள்ளதாகவும், இஸ்ரேல் தரப்போ, `அமெரிக்க எங்களுக்கு உதவுவதாக சொன்னது உண்மை தான். ஆனால் எங்களுக்கு யாருடைய உதவியும் தேவை இல்லை’ என்று தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.