“வாழ்க்கை தணிக்கை” செய்வது எப்படி? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

நாம் ஒருவரை சந்திக்கும் போது கேட்கும் முதல் கேள்வி நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? வாழ்க்கை எப்படி செல்கிறது? என்பதுதான்.

இந்த கேள்வியை நாம் மற்றவரிடம் கேட்க தயங்குவதில்லை ஆனால் நம்மிடம் இந்த கேள்வியை கேட்க நாம் தயங்குகிறோம். காரணம் உண்மையான பதிலளிக்க நாம் விரும்புவதில்லை.

சரி, போனதெல்லாம் போகட்டும், இப்போது உங்களிடம் இந்த கேள்விகளை கேளுங்கள்.

எப்படி இருக்கிறீர்கள்? வாழ்க்கையில் இப்போது நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள்? நீங்கள் எந்த நிலைக்கு செல்ல விரும்புகிறீர்கள்? எப்படி உங்கள் நிலையை மாற்றுவது?

இந்த கேள்விகளுக்கான பதிலை கண்டறிய நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான ஒன்றுதான் “வாழ்க்கை தணிக்கை”. உங்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவாக கூற இயலாது. வாழ்க்கை தணிக்கை உங்களை பற்றி ஓர் தெளிவான படத்தை உங்களுக்கு காட்டும்.

Representational Image

சரி, எப்படி வாழ்க்கை தணிக்கை செய்வது? எந்தெந்த பகுதிகளை நாம் ஆய்வு செய்ய வேண்டும்? காண்போம் வாருங்கள்.

வாழ்க்கை தணிக்கை செய்ய நாம் old school முறையை பின்பற்ற போகிறோம், அதாவது, ஒரு பேனாவும், பேப்பரும் எடுத்துக்கொள்ளுங்கள், அதில் பகுதி, இப்போதைய நிலை, நான் விரும்பும் நிலை, என் திட்டம் என நான்காக பிரித்து கொள்ளுங்கள், ஆய்வை தொடங்குங்கள்.

பகுதி | இப்போதைய நிலை | நான் விரும்பும் நிலை | என் திட்டம்

பின்வரும் 6 பகுதிகளை ஆய்வு செய்யுங்கள்:

கீழ்வரும் கேள்விகளுக்கு உண்மையாக,தெளிவாக சிந்தித்து பதிலளியுங்கள்:

1. ஆரோக்கியம்:

-> உடல் ஆரோக்கியம்.

-> மன ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம்:

எப்போதெல்லாம் உங்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது? உங்களின் உணவு பழக்கம் என்ன? காலை முதல் மாலை வரை நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகள் என்னென்ன? புரதம் நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக் கொள்கிறோம்? உடற்பயிற்சி செய்கின்றோமா? ஒரு மாதத்தில், உணவகங்களில் எத்தனை முறை உணவு உண்கிறோம்?

மன ஆரோக்கியம்:

எப்போது நீங்கள் கவலையாக உணர்கிறீர்கள் ? எப்போது கோபம் கொள்கிறீர்கள்? எவ்வளவு நேரம் உறங்குகிறீர்கள்? உங்கள் மன அமைதியை கெடுப்பதை எது?

போன்ற கேள்விகளுக்கு உங்கள் பதிலை இப்போதைய நிலை என்ற பகுதியில் எழுதிக்கொள்ளுங்கள் பின் நீங்கள் எந்த நிலைக்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதையும் அந்த நிலையை அடைய உங்கள் திட்டம் என்ன என்பதை விரிவாக நான் விரும்பும் நிலை, என் திட்டம் என்ற பகுதியில் எழுதுங்கள்.

2. நிதி

உங்களின் நிதி மேலாண்மை எப்படி இருக்கிறது? உங்களின் வரவு என்ன? செலவு என்ன? உங்களிடம் எவ்வளவு கடன் இருக்கிறது? உங்களின் சேமிப்புகள் என்னென்ன? உங்களின் முதலீடுகள் என்னென்ன?

எதில் சேமிக்கலாம்? எதில் முதலீடு செய்யலாம்? நிதி சுதந்திரத்தை அடைய நான் என்ன செய்து கொண்டு இருக்கிறேன்? நான் வாங்கும் சம்பளம் எனக்கு போதுமானதா? இரண்டாவது வருமானத்திற்கு என்ன செய்யலாம்? எப்போது ஓய்வு பெற போகிறேன்?

போன்ற கேள்விகளுக்கு உங்கள் பதிலை இப்போதைய நிலை என்ற பகுதியில் எழுதிக்கொள்ளுங்கள் பின் நீங்கள் எந்த நிலைக்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதையும் அந்த நிலையை அடைய உங்கள் திட்டம் என்ன என்பதை விரிவாக நான் விரும்பும் நிலை, என் திட்டம் என்ற பகுதியில் எழுதுங்கள்.

Representational Image

3. தனிப்பட்ட வளர்ச்சி:

ஒரே மாதிரியான வாழ்க்கையை பல வருடம் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

நாம் தனிப்பட்ட முறையில் முன்னேறி இருக்கின்றோமா? கடந்த ஆறு மாதத்தில் நான் எந்த புதிய திறனை கற்றுக்கொண்டேன்? என்னிடம் உள்ள நல்ல குணங்கள் என்னென்ன? தீய குணங்கள் எவை? நல்ல குணங்களை எப்படி வளர்ப்பது? தீய குணங்களை எவ்வாறு அகற்றுவது? எந்தெந்த பழக்கங்களை நான் கற்றுக்கொண்டால் என் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்? என்னிடம் உள்ள சிறந்த குணம் என்ன? என்னிடம் இருக்கும் திறமை என்ன? எந்த திறமையை நான் வளர்த்துக் கொள்ள விரும்புகிறேன்?

போன்ற கேள்விகளுக்கு உங்கள் பதிலை இப்போதைய நிலை என்ற பகுதியில் எழுதிக்கொள்ளுங்கள் பின் நீங்கள் எந்த நிலைக்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதையும் அந்த நிலையை அடைய உங்கள் திட்டம் என்ன என்பதை விரிவாக நான் விரும்பும் நிலை, என் திட்டம் என்ற பகுதியில் எழுதுங்கள்.

Representational Image

4. வேலை/தொழில்

உங்களின் வேலை அல்லது தொழில் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா? உங்களின் வேலை நேரத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்? உண்மையாக நீங்க எவ்வளவு நேரம் வேலை செய்கிறீர்கள்? உங்களுக்கு பிடித்த வேலை அல்லது தொழில் எது? வேலை அதிகம் இல்லாத போது அந்த நேரத்தை எப்படி பயன்படுத்துகிறீர்கள்?

உங்களின் துறைசார் அறிவை நீங்கள் வளர்த்துக் கொண்டு இருக்கிறீர்களா? உங்கள் துறையில் நீங்கள் அடைய விரும்பும் இடம் எது? அதை எப்படி சென்றடைவது?

உங்களுக்கு கிடைத்த சிறந்த பாராட்டு எது? உங்களுக்கு கிடைத்த மோசமான அனுபவம் எது? உங்கள் துறை எந்த ஒரு சார்ந்த திறனை வளர்த்துக் கொள்ள விரும்புகிறீர்கள்? அடுத்த ஒரு வருடத்திற்கு உங்கள் துறைசார் இலக்கு என்ன?

போன்ற கேள்விகளுக்கு உங்கள் பதிலை இப்போதைய நிலை என்ற பகுதியில் எழுதிக்கொள்ளுங்கள் பின் நீங்கள் எந்த நிலைக்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதையும் அந்த நிலையை அடைய உங்கள் திட்டம் என்ன என்பதை விரிவாக நான் விரும்பும் நிலை, என் திட்டம் என்ற பகுதியில் எழுதுங்கள்.

Representational Image

5. உறவுகள்:

உங்களின் நண்பர்களுடன் உங்கள் உறவு எவ்வாறு இருக்கிறது? உங்களின் உறவினர்களுடன் நீங்கள் எப்போது உரையாடினீர்கள்? எவரின் செயல் உங்களை காயப்படுத்துகிறது? ஏன்? முன்பு இருந்ததற்கும், இப்போது இருப்பதற்கும் உங்கள் உறவுகளிடம் என்ன வேறுபாட்டை காண்கிறீர்கள்?

உங்கள் குடும்பத்தினருடன் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள்? உங்களின் குடும்பத்தினருடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? உங்களை நீங்கள் நன்றாக பார்த்துக் கொள்கிறீர்களா (Self – Care)? என்னென்ன மாற்றங்கள் செய்தால் உங்கள் உறவுகளை மேம்படுத்த முடியும்?

போன்ற கேள்விகளுக்கு உங்கள் பதிலை இப்போதைய நிலை என்ற பகுதியில் எழுதிக்கொள்ளுங்கள் பின் நீங்கள் எந்த நிலைக்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதையும் அந்த நிலையை அடைய உங்கள் திட்டம் என்ன என்பதை விரிவாக நான் விரும்பும் நிலை, என் திட்டம் என்ற பகுதியில் எழுதுங்கள்.

Representational Image

6. நேரம்:

உங்களின் நேரத்தை நீங்கள் எவ்வாறு நிர்வகிக்கிறீர்கள்? காலை நீங்கள் எழுந்தது முதல் இரவு உறங்க போகும் வரை நீங்கள் என்ன செய்கிறீர்கள்? வேலை செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் என்ன செய்கிறீர்கள்? எவ்வளவு நேரம் சமூக வலைதளங்களில் செலவழிக்கிறீர்கள்? அதில் கற்றுக் கொள்கிறீர்களா, நேரத்தை கடத்துக்குறீர்களா?

எப்படி பயனுள்ளதாக உங்கள் நேரத்தை மாற்றுவது? கவன சிதைவு எப்போது ஏற்படுகிறது? அலைபேசி அடிக்கடி பயன்படுத்துகிறீர்களா? நினைத்த காரியத்தை உடனே செய்கிறீர்களா, இல்லை தள்ளி போடுகிறீர்களா? உங்களின் priority என்ன?

போன்ற கேள்விகளுக்கு உங்கள் பதிலை இப்போதைய நிலை என்ற பகுதியில் எழுதிக்கொள்ளுங்கள் பின் நீங்கள் எந்த நிலைக்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதையும் அந்த நிலையை அடைய உங்கள் திட்டம் என்ன என்பதை விரிவாக நான் விரும்பும் நிலை, என் திட்டம் என்ற பகுதியில் எழுதுங்கள்.

வாழ்க்கை தணிக்கை செய்வது நிச்சயம் உங்கள் வாழ்வில் ஒரு தெளிவை ஏற்படுத்தும். உங்கள் திட்டத்தை செயல் படுத்துங்கள் அது உங்கள் வாழ்வை மாற்றும்.

நன்றி,

நரேந்திரன் பாலகிருஷ்ணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.