Yamaha TMax – இந்தியா வரவிருக்கும் யமஹா டிமேக்ஸ் ஸ்போர்ட் ஸ்கூட்டர் சிறப்புகள்

சர்வதேச சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற யமஹா மோட்டார் நிறுவனத்தின், உயர் ரக டிமேக்ஸ்  மேக்ஸி ஸ்போர்ட் ஸ்கூட்டரின இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தும் படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது.

இந்திய வரும் வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ள யமஹா டி-மேக்ஸ் ஐரோப்பாவின் விலை EUR 13,564 (தோராயமாக ₹ 11.89 லட்சம் ) ஆக உள்ளது.

Yamaha TMax

யமஹா T-Max ஸ்போர்ட் ஸ்கூட்டர் 562cc பேரலல் ட்வின் லிக்யூடு கூல்டு DOHC 4V என்ஜின் பெற்று அதிகபட்சமாக 7,500rpm-ல் 47bhp பவரையும், 5,250rpm-ல் 56 Nm டார்க் வெளிப்படுத்தும். பின்புற சக்கரங்களுக்கு பவரை எடுத்துச் செல்ல V பெல்ட் டிரைவ் கொடுக்கப்பட்டுள்ளது.

யமஹா அறிவிப்பின்படி, லிட்டருக்கு 21 கிமீ வரை மைலேஜ் யமஹா டி-மேக்ஸ் வழங்குகின்றது.

டி-மேக்ஸ் ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் 120mm பயணிக்கும் யூஎஸ்டி போர்க் மற்றும் 117 மிமீ பயணத்துடன் கூடிய ஸ்விங்கர்ம் பொருத்தப்பட்ட பின்புற ஷாக் அப்சார்பர் உள்ளது. 267mm டூயல் டிஸ்க் முன்பக்கத்தில் மற்றும் 282mm சிங்கிள் டிஸ்க் ரியர் பிரேக்கிங் கொண்டுள்ளது. முன்புறத்தில் 120/70 டயர் மற்றும் 160/60 டயருடன் 15 இன்ச் அலாய் வீல் கொண்டுள்ள யமஹா டி மேக்ஸ் மேக்ஸி ஸ்கூட்டர் 1,575mm வீல்பேஸ் மற்றும் 218 கிலோ எடை கொண்டுள்ளது.

‘யமஹா டி-மேக்ஸ் ஸ்கூட்டரில் எல்இடி புராஜெக்டர் ஹெட்லேம்ப், TFT கிளஸ்ட்டர், கீலெஸ் புஷ்-பட்டன் ஸ்டார்ட், மேம்பட்ட எலக்ட்ரானிக் எய்ட்ஸ், அண்டர் சீட் ஸ்டோரேஜ், ஆன்டி-தெஃப்ட் வசதி மற்றும் சென்ட்ரல் லாக்கிங் ஸ்டாண்ட் உள்ளது.

இந்திய சந்தைக்கு  யமஹா டி-மேக்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால் ரூ.15 லட்சத்துக்கும் கூடுதலான விலையில் அறிமுகம் செய்யப்படலாம். முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ளது.

வரும் டிசம்பர் 2023 முதல் வாரத்தில் யமஹா MT-03, R3 என இரண்டு மாடல்களையும் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.