![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1697046252_NTLRG_20231011130819240833.jpg)
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் புதிய வெப் தொடர்!
கனா, நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களை இயக்கியவர் அருண்ராஜா காமராஜ். தற்போது முதல் முறையாக 'லேபிள்' எனும் புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கியுள்ளார். இதனை டிஸ்னி ஹாட் ஸ்டார் நிறுவனம் தயாரித்துள்ளனர். ஜெய், மாஸ்டர் மகேந்திரன், தன்யா ஹோப், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம். சி. எஸ் இதற்கு இசையமைத்துள்ளார். விரைவில் இந்த வெப் தொடர் வெளியாகிறது என மோசன் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.