இந்தியாவின் பேட்டிங் பேராசை… ஷமிக்கு பதில் ஷர்துலுக்கு வாய்ப்பளித்த பின்னணி என்ன?

IND vs AFG, Shardul Thakur: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் 9ஆவது லீக் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று (அக். 11) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மோதி வருகின்றன. நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றியுடனும், வங்கதேசத்திடம் வீழ்ந்து ஆப்கானிஸ்தான் தோல்வியுடனும் இந்த போட்டியை இரு அணிகளும் எதிர்கொள்கின்றன. 

அந்த வகையில், இன்றைய போட்டியின் டாஸை வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மேலும் அவர்,”நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம். இது பேட்டிங்கிற்கு ஆடுகளம் போல் தெரிகிறது. அவர்களை கட்டுப்படுத்த எங்களிடம் நல்ல பந்துவீச்சு உள்ளது. இது ஒரு நல்ல ஆடுகளம் போல் தெரிகிறது, நாங்கள் பேட்டிங் மூலம் பெரிய ஸ்கோரை நிர்ணயிக்க விரும்புகிறோம். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம், எங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு” என்றார். மேலும் ஆப்கன் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. 

தொடர்ந்து, டாஸை இழந்த இந்திய அணி கேப்டன் ரோஹித், டாஸை வென்றிருந்தால் தாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருப்போம் என்றார். மேலும், போட்டியில் அஸ்வினுக்கு பதில் ஷர்துல் தாக்கூரை கொண்டுவருவதாகவும் அறிவித்தார். இந்திய அணியின் இந்த முடிவு பல மூத்த வீரர்கள் உள்பட பலரையும் ஆச்சர்யத்திலும், அதிருப்திக்கும் உள்ளாக்கியுள்ளது எனலாம். பலரும் அஸ்வினுக்கு பதில் ஷமி களமிறக்கப்படுவார் என எதிர்பார்த்த நிலையில், இது பெரும் ஏமாற்றமாக அமைந்ததாக கூறுகின்றனர். 

Why did they pick Shardul Thakur as the third pacer over Mohammad Shami?
And if they went with Shardul for his batting, it makes you wonder if the team doesn’t have confidence in its main batters, relying on the number eight guy instead. Weird, right? #INDvsAFG pic.twitter.com/9ebMItDAKu

— Anil Tiwari (@Anil_Kumar_ti) October 11, 2023

அதிருப்தி

இதுகுறித்து தொலைக்காட்சி நேரலையில் பேசிய இந்திய அணியின் மூத்த வீரர் சுனில் கவாஸ்கர்,”மீண்டும் அஸ்வின் அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவர் என்ன தவறு செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் அணியில் இருந்து வெளியேறுவது வழக்கமாக உள்ளது. 2019 உலகக் கோப்பை தொடரில் ஷமி ஆப்கானிஸ்தான் எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். அவர் விளையாடுவார் என எதிர்பார்த்தேன்” என கூறினார். 

First six of the match comes against Shardul Thakur. Good to see the Lord helping in the development of up and coming cricket nations.

— Heisenberg (@internetumpire) October 11, 2023

அதாவது, கடந்த 2019 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் ஷமி. அவர் அந்த போட்டியில் 9.5 ஓவர்கள் வீசி ஹாட்ரிக் உடன் 4 விக்கெட்டுகளை எடுத்து 40 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். 

ஷமியின் சீம் அட்டாக் பேட்டர்களுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, பும்ரா இல்லாத கடந்த ஓராண்டில் சிராஜ் உடன் ஷமிதான் இந்திய பந்துவீச்சை வழிநடத்தி வந்தார். அந்த வகையில், தற்போது பும்ரா வந்தவுடன் அவரை வெளியே அமரவைப்பதை கூட ஏற்றக் கொள்ளத்தக்கது என்றாலும் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் எனும்போது ஷமி பதில் ஷர்துலை அணியில் எடுத்திருப்பது சரியாக இருக்காது என பலரும் கருத்து கூறி வருகின்றனர். 

Mohammad Shami Was The Reason Why We Won Against Afghanistan in CWC 2019 .

Badly missing shami instead of Shardul Thakur shami more more capable to take wickets#INDvsAFG pic.twitter.com/9D4xAhYDGl

— Sekar (@itzSekar) October 11, 2023

நம்பர் 8 பேராசை…

இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித், பயிற்சியாளர் டிராவிட், அணி தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் 8ஆவது வீரர் நிச்சயம் பேட்டிங்கிலும் பெரும் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதை எதிர்பார்ப்பதாக ஆசிய கோப்பைக்கான அணியை அறிவிக்கும்போதே தெரிவித்திருந்தனர். எனவேதான் உலகக் கோப்பையில் முதல் ஆப்ஷனாக ஷர்துல் (அ) அக்சர் படேலை பிசிசிஐ தேர்வு செய்தது. மேலும், அக்சரின் காயத்திற்கு பின்னரும் பேட்டிங்கில் பங்களிக்கக் கூடிய அஸ்வினையே எடுத்துள்ளது. 

Early days still, and hopefully Shardul Thakur will have a good game, but this was probably a good day to play Shami.

— Harsha Bhogle (@bhogleharsha) October 11, 2023

இதனால்தான் இன்று 8ஆவது வீரராக ஷமிக்கு பதில் ஷர்துல் களமிறங்கியுள்ளார். ஷர்துல் பேட்டிங்கில் இந்தியாவுக்கு முக்கிய ரன்களை அடித்து தருவார் என்றாலும், ஷமி எடுத்துக்கொடுக்கும் விக்கெட்டும், டாட் பாலும் அதைவிட முக்கியமானது என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும், இந்தியாவின் முதல் 7 பேட்டர்கள் அடிக்காத ரன்களையா ஷர்துல் அடித்து தர போகிறார் எனவும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். பிரபல தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே அவரது X பக்கத்தில்,”ஷர்துல் தாக்கூர் ஒரு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன். ஆனால் ஷமி விளையாடுவதற்கு இது ஒரு நல்ல நாளாக இருந்திருக்கும்” என பதிவிட்டுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.