
ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்
ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜப்பான்'. அனு இம்மானுவேல், சுனில், விஜய் மில்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த வருட தீபாவளிக்கு இத்திரைப்படம் வெளியாகிறது.
இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகின்ற அக்டோபர் 28ம் தேதி அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.