ஜியோவின் திடீர் சர்ப்ரைஸ்… ஓடிடிகள் இலவசம், பம்பர் பலன்கள் – ஆண்டுக்கு இவ்வளவுதான்!

Jio Best Prepaid Plan: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடோஃபோன் ஐடியா உடன் போட்டி போட்டுக் கொண்டு, தொழில்துறையில் மிகவும் விலையுயர்ந்த ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் விலையை கேட்க சற்று மலைப்பாக இருந்தாலும் அதன் பலன்கள் அதிகமாகும்.

இந்த திட்டத்தின் விலை 3 ஆயிரத்து 662 ரூபாய் ஆகும். இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா மற்றும் பிற அம்சங்கள் உள்ளன. மேலும், இது எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாமல் தொடங்கப்பட்டது. ஆண்டு முழுவதும் ரீசார்ஜ் செய்வதில் உள்ள தொந்தரவைத் தவிர்த்து, அதிக டேட்டாவைப் பயன்படுத்த விரும்பினால், இந்தத் திட்டம் நன்றாக இருக்கும். இந்த திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஜியோவின் ஆண்டுத் திட்டம்

ஜியோவின் 3 ஆயிரத்து 662 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டம் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில், பயனர்கள் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுகிறார்கள். இந்த திட்டத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு ஆண்டுக்கு 912.5 GB டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் வரம்பற்ற 5G டேட்டாவையும் பெறுவார்கள். 

ஜியோவின் ரூ.3662 திட்டம் ஒரு சிறந்த திட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில், பயனர்கள் வரம்பற்ற டேட்டா, குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் மற்றும் ஒரு வருடத்திற்கு SonyLIV மற்றும் ZEE5 ஓடிடிகளின் இலவச அணுகலைப் பெறுகிறார்கள். இரண்டு OTT இயங்குதளங்களைப் பயன்படுத்தும் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களைப் பார்க்க இது ஒரு சிறந்த வழியாகும்.

குறிப்பாக, JioCinema, JioCloud மற்றும் JioTV போன்ற பிற OTT நன்மைகளும் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் அடங்கும். ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்களுக்கு இந்த திட்டம் கிடைக்கிறது. FUP (நியாயமான பயன்பாட்டுக் கொள்கை) தரவு வரம்பை அடைந்தவுடன், இணைய வேகம் 64 Kbps ஆக மாறும் என்பதையும் நினைவில் கொள்ளவும். ரிலையன்ஸ் ஜியோ இதுவரை 7764 நகரங்கள் மற்றும் கிராமங்களை 5ஜி மூலம் அடைந்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனம் 2023ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் 5G வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Netflix ஓடிடி சலுகை வேண்டுமா?

இந்த திட்டத்தில் SonyLIV மற்றும் ZEE5 ஓடிடிகளின் இலவச அணுகல் வழங்கப்பட்டாலும் பல பேர் Netflix அணுகலை விரும்புவார்கள். ஆனால், இந்த பரீபெய்ட் திட்டத்தில் இது வழங்கப்படவில்லை. இருப்பினும், வேறும் சில ஜியோவின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் Netflix ஓடிடி இலவசமாக வழங்கப்படுகிறது. ஜியோவின் ரூ.1099 திட்டம் நெட்ஃபிக்ஸ் மொபைல் சந்தாவுடன் வருகிறது. அதே நேரத்தில், ஜியோவின் ரூ.1499 திட்டம் நெட்ஃபிளிக்ஸ் மொபைல் சந்தாவுடன் வருகிறது. இதில் ரூ. 1099 திட்டம் தினமும் 2 GB டேட்டாவும், ரூ.1499 திட்டம் 3 GB டேட்டாவும் வழங்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.