![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1697051595_NTLRG_20231011143858673989.jpg)
தமிழில் வெளியாகும் 'கண்பத்'
மிகவும் எதிர்பார்க்கப்படும் பாலிவுட் படம் கண்பத். படத்தை விகாஸ் பாஹ்ல் இயக்கி இருக்கிறார். வாசு பாக்னானி, ஜாக்கி பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக் மற்றும் விகாஸ் பால் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படத்தில் டைகர் ஷெராப், கீர்த்தி சனோன், அமிதாப் பச்சன் நடித்துள்ளனர். வருகிற 20ம் தேதி வெளியாகிறது. இந்தியில் தயாராகி இருந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகிறது. படத்தின் தமிழ் முன்னோட்டம் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்து கடவுள்களின் பின்னணியில் உருவாக்கப்படும் சூப்பர் ஹீரோ படங்களின் வருகை அதிகரித்துள்ளது, ராமன், ஹனுமன், சிவன், முருகன், ஐய்யப்பன் ஆகியோரின் பின்னணியில் ஏற்கெனவே படங்கள் வெளிவந்துள்ளது. இந்த படம் கணபதியை பின்புலமாக கொண்டு உருவாகி உள்ளது. ஹாலிவுட் படங்களின் பாணியில் பேண்டசி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது. படத்தின் விஎப்எஸ் பணிகளை ஹாலிவுட் கலைஞர்கள் செய்துள்ளனர். ஹீரோ டைகர் ஷெராப் 8 பேக்ஸ் உடலமைப்புடன் நடித்திருக்கிறார். கீர்த்தி சனோன் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.