வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அங்காரா: ஒரு நாள் நீங்களும் சுட்டுக்கொல்லப்படுவீர்கள் என இஸ்ரேல் பிரதமருக்கு துருக்கி கல்வித்துறை இணையமைச்சர் நஜீப் இல்மாஸ் சாபமிட்டுள்ளார்.
இஸ்ரேலுக்குள் ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, ராணுவம் மற்றும் விமானப்படை மூலம் இஸ்ரேல் ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பிலும் 3 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். தாக்குதல் தொடர்பான வீடியோக்களை இஸ்ரேல் ராணுவம் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறது. அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவும் தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டு இருந்தார்
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/gallerye_174009157_3454832.jpg)
இந்த வீடியோவை மேற்கோள் காட்டி துருக்கி கல்வித்துறை துணை அமைச்சர் நசீப் இல்மாஸ் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஒரு நாள் நெதன்யாஹூவையும் சுட்டு வீழ்த்துவார்கள். நீங்களும் கொல்லப்படுவீர்கள் எனக்கூறியுள்ளார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement