பதான்கோட் தாக்குதல் முதன்மை குற்றவாளி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை| Terrorist shot dead in Pakistan: He is the main culprit of Pathankot attack

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இஸ்லாமாபாத்: 2016ம் ஆண்டு பதான்கோட் தாக்குதலில் முதன்மை குற்றவாளியாக செயல்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஷாஹித் லதீப் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில் கடந்த 2016ம் ஆண்டு பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்ற இந்த பயங்கரவாத தாக்குதலில் இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் 7 பேர் வீர மரணம் அடைந்தனர்.

இதற்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம் 4 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது. இருப்பினும் அதற்கு முக்கியப் புள்ளியாக இருந்த பயங்கரவாதிகள் தப்பிவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், பதான்கோட் தாக்குதலுக்கு முக்கியப் புள்ளியாக இருந்த ஷாஹித் லதீப் என்கிற பயங்கரவாதி பாகிஸ்தானில் உள்ள சைல்கோட்டில் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார்.

இது குறித்து பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் கூறியிருப்பதாவது: லதீபை சுட்டுக் கொன்றவர்கள், உள்ளூரைச் சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. கிளர்ச்சியாளர்கள் தான் அவரை சுட்டுக்கொன்றிருக்க வேண்டும் என தகவல் தெரிவிக்கின்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.