புக்ஸார்,
புதுடில்லி – அசாம் இடையிலான, வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில், பீஹார் அருகே நேற்றிரவு தடம் புரண்டதில், ஐந்து பயணியர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
புதுடில்லியின் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் இருந்து அசாமின் கவுஹாத்தி அருகே உள்ள காமாக்கியா நோக்கி, வட கிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 7:40 மணிக்கு புறப்பட்டது.
இந்த ரயில், நேற்றிரவு 9:35 மணிக்கு, பீஹாரின் புக்ஸார் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்புர் ரயில்நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென தடம் புரண்டது. ரயிலின் 23 பெட்டிகளில் ஆறு பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்த இடத்துக்கு தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்தார். காயம் அடைந்தவர்கள் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர்.
மீட்பு பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை தொடர்ச்சி 5ம் பக்கம்
விரைவுபடுத்தும்படி பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து தொடர்பான தகவல்களை அறிய அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 9771449971 8905697493, 8306182542, 8306182542 மற்றும் 7759070004 ஆகிய தொலைபேசி தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement