![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1697003412_NTLRG_20231011102719251467.jpg)
லியோ படத்தில் பேமிலி சென்டிமென்ட் பாடல்!
விஜய்யின் லியோ படத்தில் இடம் பெற்றுள்ள 'நா ரெடி தான்', 'பேடாஸ்' போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. இந்த நிலையில் தற்போது லியோ படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்பிலும் என்று தொடங்கும் அந்த பாடல் பேமிலி செண்டிமென்ட் சூழலில் உருவாகி இருக்கிறது.
கதைப்படி இப்படத்தில் கணவன்- மனைவியாக நடித்துள்ள விஜய், திரிஷாவுக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவர்கள் மூவரும் சம்பந்தப்பட்ட சூழலில் இந்த பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் அதிரடி ஆக்சன் கதையில் உருவாகியுள்ள லியோ படத்தில் சென்டிமென்ட் காட்சிகளும் இடம்பெற்றிருப்பது இந்த பாடம் மூலம் தெரிய வந்துள்ளது.