16 வயது இந்திய பெண்ணின் AI நிறுவனம்… இப்போ அதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Pranjali Awasthi: இளம் வயதிலேயே பல சாதனையாளர்களை நாம் பார்த்திருப்போம். சச்சின் டெண்டுல்கர், ஏ.ஆர். ரஹ்மான் போன்றோர் தங்களின் பதின்ம வயதிலேயே அவர்கள் சார்ந்த துறையில் பெரும் பெயரை சம்பாத்திருந்தனர். அதே போல் தற்போது பிரஞ்சலி அவஸ்தி என்ற 16 வயது இந்தியப் பெண், தனது AI ஸ்டார்ட்அப் நிறுவமான Delv.AI மூலம் தொழில்நுட்பத் துறையையே கலக்கி உள்ளார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. 

அமெரிக்காவில் நடைபெற்ற Miami Tech Week நிகழ்வின் போது பேசிய பிரஞ்சலி அவஸ்தி, கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் தனது நிறுவனத்தை தொடங்கியதாகவும், சுமார் ரூ. 3.7 கோடி அளவில் முதலீடுகளைப் பெறுவதில் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தது பலரையும் வியக்க வைத்தது எனலாம்.

மதிப்பு ரூ. 100 கோடி

இணைய வளங்களில் எப்போதும் விரிவடைந்து வரும் இந்த உலகில் குறிப்பிட்ட தகவலை விரைவாகக் கண்டறியவதற்கு கல்வியாளர்களுக்கு உதவுவதே Delv.AI நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்றும் பிரஞ்சலி கூறினார். Delv.AI நிறுவனம் சுமார் 4,50,000 அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ. 3.7 கோடி) நிதியாகப் பெற்றுள்ளது, தற்போது இதன் மதிப்பு சுமார் 12 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். (சுமார் ரூ. 100 கோடி) ஆகும்.

Delv.AI நிறுவனத்தின் பல அம்சங்களை, குறியீட்டு முறை முதல் செயல்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர் பராமரிப்பு வரை நிர்வகிக்கிறது. அதே நேரத்தில் ஒரு சிறிய ஆனால் பயனுள்ள ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. தனது தந்தையே அவரின் வெற்றிக்கு உதவியவர் என்றும் தனது ஸ்டார்அப் நிறுவனத்தின் அத்தனை பெருமையும் அவரையே சாரும் என்றும் பிரஞ்சலி அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

7 வயதில் Programming

ப்ராஞ்சலியின் தந்தை பொறியாளர் ஆவார். அவர் அளித்த ஊக்கம் மற்றும் ஆதரவின் காரணமாக தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வம் இளமையிலேயே பிரஞ்பலிக்கு தொடங்கியதாக தெரிகிறது. பிரஞ்சலி தனது ஏழு வயதிலேயே பிரோகிராமிங் செய்ய தொடங்கியுள்ளார். இது அவரது சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது.

பிரஞ்சலி 11 வயதாக இருந்தபோது, ​​அவரது குடும்பம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு குடிபெயர்ந்தது. கணினி அறிவியல் பாடங்கள் மற்றும் சவாலான கணித படிப்புகள் உள்ளிட்ட கூடுதல் விருப்பங்களுக்கான அணுகலை அவருக்கு வழங்கியது. அவர் புளோரிடா இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டியின் ஆராய்ச்சி ஆய்வகங்களில் இன்டர்ன்ஷிப்பில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு வயது 13. அப்போதுதான், அவருக்கு அவரது வணிக நிறுவனத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.

புதிய யோசனை

கொரோனா தொற்றுநோய் காரணமாக, பிரஞ்சலி தனது இன்டர்ன்ஷிப்பை Machine Learning திட்டங்களில் பணிபுரிந்து, ஆன்லைனிலேயே உயர்நிலைப் பள்ளியில் படித்தார். OpenAI நிறுவனம் ChatGPT-3 பீட்டாவை அறிமுகப்படுத்தியது. இது ஆராய்ச்சித் தரவின் பிரித்தெடுத்தல் மற்றும் சுருக்கத்தை விரைவுபடுத்த AI-ஐ பயன்படுத்துவதற்கான யோசனையை உருவாக்கியது. இந்த நேரத்தில் Delv.AI ஆனது, தரவுப் பிரித்தெடுக்கும் செயல்முறைகளை (Data Extraction Process) மேம்படுத்துவதற்கு இயந்திரக் கற்றலை மேம்படுத்துவதே அவஸ்தியின் நோக்கமாக இருந்தது. 

திருப்புமுனையும், பள்ளிப்படிப்பும்…

மியாமியில் ஒரு AI ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தது, அது அவரது வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. அந்த பணியை ஏற்றுக்கொண்டதால் அவஸ்தி தனது உயர்நிலைப் பள்ளி படிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டியதாகியது. கனவுகளை பின்பற்றுவதில் பிரஞ்சலியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாக இருந்தது. 

பிரஞ்சலி அவஸ்தியின் இந்தியப் பெற்றோர்கள் இன்னும் கல்வியை ஒரு முக்கியமான நற்பண்பாகக் கருதும் அதே வேளையில், அவர் தனது கடமைகள் மற்றும் அவரது நிறுவனத்தின் மீதான பற்றுதலால் தனது கல்லூரி ஆசைகளை தற்போதைக்கு தள்ளி வைக்க முடிவு செய்துள்ளார். எதிர்காலத்தில் தனது தொழில் முனைவோர் வாழ்க்கைக்கு உதவும் வணிக அறிவைப் பெற பள்ளிக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.