சென்னை: தமிழக உள்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு. இணையவழி சூதாட்டத்தை தடுத்தல் மற்றும் ஒழுங்குபடுத்தும் விதமாக, தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டம், 2022-ல் இயற்றப்பட்டது.
அச்சட்டத்தின்படி, தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி முகமது நசிமுதீன், உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி எம்.சி.சாரங்கன், கிண்டி பொறியியல் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் சி.செல்லப்பன், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் ஓய்வுபெற்ற மருத்துவர் ஓ.ரவீந்திரன், இன்கேஜ் குழு நிறுவனர் விஜய் கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.